இதை நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. சாய் சுதர்சன் விடயத்தில் நிர்வாகம் செய்தது பெரிய தப்பு – அணில் கும்ப்ளே கருத்து

Kumble and Sai
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அனுபவ வீரரான புஜாரா ஓரங்கட்டப்பட்ட பிறகு ஏகப்பட்ட வீரர்கள் மூன்றாம் இடத்தில் பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் எந்த ஒரு வீரரும் பெரியளவில் அந்த இடத்தினை பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்திற்கான வாய்ப்பு இங்கிலாந்து தொடரின் போது வழங்கப்பட்டது.

சாய் சுதர்சனை நீக்கியது பெரிய தவறு : அணில் கும்ப்ளே

அந்த தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது சாய் சுதர்சன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் அவர் மூன்றாம் இடத்தினை நிரந்தரமாக பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 9 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதம் உட்பட 273 ரன்கள் குவித்துள்ளார். இப்படி தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சாய் சுதர்சன் தனது செயல்பாட்டை படிப்படியாக உயர்த்தி வரும் வேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்தில் விளையாடி வருகிறார். இப்படி பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பலரது மத்தியிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அணில் கும்ப்ளே கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இப்படி ஒரு மாற்றம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் சாய் சுதர்சன் இந்த போட்டியில் விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் அவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைப்பது என்பது பொருத்தமானது கிடையாது. இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆவது இடத்தில் விளையாட தகுதியானவரா? – புஜாரா கொடுத்த நேரடி பதில்

நான் இந்த மைதானத்தில் மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைத்தேன். அப்படி பார்க்கையில் சாய் சுதர்சன் இந்த போட்டியில் விளையாடிருக்க வேண்டும். ஆனால் ஒரு முழுநேர பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார்கள்? என்பது புரியவில்லை என்றும் அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement