டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆவது இடத்தில் விளையாட தகுதியானவரா? – புஜாரா கொடுத்த நேரடி பதில்

Pujara and Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டதும் தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

வாஷிங்டன் சுந்தர் 3 ஆவது இடத்திற்கு சரியானவரா? : புஜாரா பதில்

அந்த வகையிலேயே நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 18 ரன்களில் இருந்தபோது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அதன்பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 82 பந்துதுகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இப்படி முழுநேர பேட்ஸ்மனாக சாய் சுதர்சன் இருந்தும் அவரை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை மூன்றாவது இடத்தில் விளையாட வைத்திருப்பது பலரது மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் அனுபவ வீரரான சத்தீஸ்வரர் புஜாரா கூறுகையில் :

வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தை நிரந்தரமாக பிடிப்பாரா? என்று கேட்டால் என்னுடைய கணிப்பின்படி இல்லை என்றே கூறுவேன். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மூன்றாவது இடத்தில் நமது அணியின் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் விளையாட வேண்டும். ஆனால் வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் ஒரு நான்காவது சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

- Advertisement -

எனவே அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பது என்பது தவறான முடிவு என்று கூறுவேன். முதல் இன்னிங்சில் அவர் வெறும் ஒரு ஓவர் மட்டுமே வீசியிருந்தார். அடுத்த இன்னிங்ஸில் அவர் எத்தனை ஓவர் வீசுவார் என்பது எனக்கு தெரியவில்லை. இப்படி சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மூன்றாவது இடத்தில் கொண்டு வந்து விளையாட வைப்பது என்பது சரியான முடிவு என எனக்கு தோன்றவில்லை.

இதையும் படிங்க : 83 இன்னிங்ஸ்.. விராட் கோலியை போலவே கம்பேக்கில் ஆச்சர்யம் கொடுத்த பாபர்.. பாக்கிற்க்காக 2 வரலாற்று சாதனை

சாய் சுதர்சன் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். வளர்ந்து வரும் இளம் வீரருக்கு போதுமான வாய்ப்பை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் அவர் தனது திறனை நிச்சயம் வெளிப்படுத்துவார் என்று புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement