83 இன்னிங்ஸ்.. விராட் கோலியை போலவே கம்பேக்கில் ஆச்சர்யம் கொடுத்த பாபர்.. பாக்கிற்க்காக 2 வரலாற்று சாதனை

Babar Azam
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக பாகிஸ்தான் தங்களது சொந்த ஊரில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் 2வது போட்டி நவம்பர் 14ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்றது. அப்போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை வென்றது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் போராடி 288/8 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக சமரவிக்ரமா 42, ஜனித் லியனகே 54, கமிண்டு மெண்டிஸ் 44, ஹஸரங்கா 37* ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது, ஹரிஷ் ரவூப் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

விராட் கோலி போல கம்பேக்:

அடுத்ததாக 289 ரன்களை சேசிங் செய்த பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் 78, சாய்ம் ஆயுப் 33 ரன்கள் படித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் பாபர் அசாம் சதத்தை அடித்து 102*, முகமது ரிஸ்வான் 51 ரன்கள் அடித்து போட்டியை முடித்தனர். இலங்கைக்கு அதிகபட்சமாக சமீரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வரும் பாபர் அசாம் ஒருவழியாக இப்போட்டியில் 807 நாட்கள் கழித்து சதத்தை அடித்தார். கடைசியாக 2023 ஆசியக் கோப்பையில் கத்துக்குட்டியான நேபாளுக்கு எதிராக அவர் சதத்தை அடித்திருந்தார். அப்போதிலிருந்து கடந்த இரண்டரை வருடங்களாக 83 சர்வதேச இன்னிங்ஸில் சதத்தை அடிக்காமல் திணறிய அவரை பலரும் கிண்டலடித்து விமர்சித்தார்கள்.

- Advertisement -

2 வரலாற்று சாதனைகள்:

குறிப்பாக 2019க்குப்பின் இந்திய ஜாம்பவான் விராட் கோலியும் இரண்டரை வருடங்களாக சதமடிக்க முடியாமல் திண்டாடியதை மறக்க முடியாது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி ஒருவழியாக 83 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குப் பின் 2022 ஆசியக் கோப்பையில் 84வது இன்னிங்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து பதிலடி கொடுத்தார். அதே போல தற்போது பாபர் அசாமும் மிகச்சரியாக 83 சர்வதேச இன்னிங்களுக்குப் பின் 84வது இன்னிங்சில் சதத்தை அடித்து விராட் கோலி போலவே கம்பேக் கொடுத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக அமைகிறது.

இதையும் படிங்க: 807 நாட்கள் 20வது சதங்கள்.. ஒருவழியாக சதமடித்த பாபர் வரலாற்று சாதனை சமன்.. இலங்கையை வீழ்த்திய பாக்

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக (8) சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாபர் படைத்துள்ளார். இதற்கு முன் முகமது யூசுப் 7 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 20 சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் பாபர் படைத்துள்ளார். இதற்கு முன் சயீத் அன்வர் 244 இன்னிங்ஸில் அடித்த 20 சதங்களை பாபர் 136 இன்னிங்ஸிலேயே அடித்துள்ளார்.

Advertisement