- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த சேன்ஸை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்வேன்.. நான் ரெடியா இருக்கேன் – கருண் நாயர் பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த வாய்ப்புக்காக தான் காத்திருந்தேன் : கருண் நாயர்

இதன் காரணமாக இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பிடித்து உள்ளதால் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 303 ரன்களை குவித்த அவர் சேவாக்கிற்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனாலும் அவருக்கு 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக மலைபோல் ரன் குவித்ததன் மூலமாக தற்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ரஞ்சி தொடரில் விதர்பா அணிக்காக 9 போட்டிகளில் விளையாடிய அவர் 4 சதம் உட்பட 863 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி விஜய் ஹசாரே போட்டிகளிலும் 5 சதங்களை விளாசியிருந்தார். அப்படி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாகவே அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருப்பதற்கு முன்னதாக பேட்டி ஒன்றினை அளித்துள்ள கருண் நாயர் கூறியதாவது : இந்திய டெஸ்ட் அணிக்குள் மீண்டும் வந்தது உண்மையிலேயே சிறப்பான உணர்வை தருகிறது. இந்த வாய்ப்புக்காக நான் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் எனக்கு இந்திய அணியில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நழுவ விடாமல் இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என்று கருண் நாயர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 2 முறை யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரம் பேசிய கவுதம் கம்பீர்.. என்ன பேசினார்? – விவரம் இதோ

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடரில் எனக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனாலும் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இந்த உணர்வினை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை என கருண் நாயர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -