- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்காக விளையாடும் கம்பேக் வாய்ப்பை நெருங்கிட்டேன்.. அந்த தொடரில் கிடைக்கும்.. கருண் நாயர் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாடுவதற்காக கருண் நாயர் கடுமையாக போராடி வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர் 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தார். அதனால் வீரேந்தர சேவாக்கிற்கு நிகராக சாதனை படைத்த அவர் அதற்கடுத்த போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடி வருகிறார். அந்த வரிசையில் கடந்த விஜய் ஹசாரே அபாரமாக விளையாடிய கருண் நாயர் 5 சதங்கள் உட்பட 779 ரன்கள் எடுத்தார். அதனால் கடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் சாம்பியன்ஸ் ட்ராபியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

- Advertisement -

போராடும் நாயர்:

ஆனால் ஏற்கனவே அசத்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தினார். அதோடு நிற்காத கருண் நாயர் 2024 – 25 ரஞ்சிக்கோப்பை இறுதிப் போட்டியிலும் சதத்தை அடித்து 135, 85 ரன்களை குவித்து விதர்பா கோப்பையை வெல்ல உதவினார்.

இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் சதத்தை அடித்ததால் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை நெருங்கியுள்ளதாக கருண் நாயர் தெரிவித்துள்ளார். அடுத்து நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக தாம் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதை சிறப்பாக செய்தால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடரில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் மறைமுகமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நெருங்கும் வாய்ப்பு:

இது பற்றி கருண் நாயர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பில் குறைந்தபட்சம் தற்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் நெருக்கமாக இடத்தில் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அது எனது மனதின் பின்பகுதியில் இருக்கிறது”

இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜாவுக்கு வீசிய அந்த 2 பந்தால் எனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது – மோஹித் சர்மா வருத்தம்

“ஆனால் தற்போதைய நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களுடைய அணியின் வெற்றியில் பங்காற்ற விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் உள்ளூரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்த வருடம் கருண் நாயருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -