- Advertisement -
இந்திய கிரிக்கெட்

8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பும் அதிர்ஷ்டம்.. கட்டாயத்தில் நிர்வாகம் – கருண் நாயருக்கு லக்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 62.3 ரன்கள் சராசரியுடன் 374 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போட்டியின் போது ஆட்டமிழக்காமல் 303 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். ஆனாலும் நட்சத்திர வீரர்களின் இருப்பு காரணமாக அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் கருண் நாயர் :

அதோடு முச்சதம் அடித்த பின்னர் 8 ஆண்டுகளாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அவருக்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் இதுவரை கருண் நாயர் விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் (112*, 163*, 111*, 112*, 122*) ஐந்து சதங்களையும், ஆட்டமிழக்காமலும் ஒரு இன்னிங்ஸில் 44* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் 664 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்த விஜய் ஹசாரே தொடரில் தனது மிக சிறப்பான பார்மை வெளிப்படுத்திய அவருக்கு டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் வழங்கியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழு தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஆறு மாதத்திற்கு பிறகு நடைபெற இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அவர் விஜய் ஹசாரே தொடரிலும் அசத்தியுள்ளார்.

- Advertisement -

இதன்காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வெளியிட்டிருந்த ஒரு சமூக வலைதள பதிவில் : “டியர் கிரிக்கெட், மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு” என்று உருக்கமான பதிவினை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிற்கு அடுத்து 23 வயது இளம்வீரரை கேப்டனாக்க விரும்பும் கவுதம் கம்பீர் – யார் அந்த வீரர்?

அதனைத்தொடர்ந்து தற்போது அடுத்து 13 மாதங்களில் தனது அட்டகாசமான ஆட்டத்தினால் தேர்வுக்குழுவினரது கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அவர்களே வாய்ப்பு கொடுக்கும் கட்டாயத்திற்கும் அவர்களை தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -