
ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரை வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் 20, 19 வயதாகும் அவர்கள் இதற்கு முன் சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடுவிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் அவர்களை தலா 14.20 கோடிகள் கொடுத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானை சேர்ந்த கார்த்திக் ஷர்மா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். கடந்த வருடம் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமான அவர் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதே போல விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரிலும் அறிமுகப் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.
இது மட்டுமின்றி சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் கார்த்திக் 11 இன்னிங்ஸில் 28 சிக்ஸர்கள் உட்பட 162 ஸ்ட்ரைக் ரேட்டில் 332 ரன்களை அடித்துள்ளார். அந்த வகையில் உள்ளூரில் 3 விதமான கிரிக்கெட்டிலும் இதுவரை அவர் 30 இன்னிங்ஸில் 78 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மறுபுறம் 44 வயதாகும் தோனி அடுத்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவே மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய கார்த்திக்கை வருங்காலங்களில் தோனிக்கு மாற்று வீரராக வளர்க்கும் நோக்கத்துடன் சிஎஸ்கே பெரிய தொகைக்கு வாங்கியிருக்கும் நம்பப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி தம்மை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கார்த்திக் சர்மா தெரிவித்துள்ளார். அந்த வாய்ப்பில் தோனியிடம் நிறைய கற்றுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கார்த்திக் பேசியது பின்வருமாறு. “என்னுடைய ஏலம் துவங்கிய போது விலை போகாமல் சென்று விடுவேனோ என்ற பயத்தில் அழுதேன். இருப்பினும் சிஎஸ்கே என்னை வாங்கிய போது எங்கள் வீட்டில் இருந்த அனைவரும் கொண்டாடினார்கள். ஆனால் அப்போது கூட என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. உண்மையில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு தொகையை நான் எதிர்பார்க்கவில்லை”
இதையும் படிங்க: தேங்க் யூ சோ மச்.. தன்னை ஏலத்தில் வாங்கிய சி.எஸ்.கே அணிக்கு நன்றி தெரிவித்து – சர்பராஸ் கான் நெகிழ்ச்சி பதிவு
“இதற்கு முன் நான் சென்னை நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். அவர்கள் என்னிடம் சிலவற்றை சொன்னார்கள். ஆனால் இப்படிப்பட்ட வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்புக்காக ஆசிர்வாதிக்கப்பட்டவனாக உணரும் நான் தோனி பாயை பார்க்க உற்சாகத்துடன் உள்ளேன். அவரிடம் முடிந்த வரை அதிகம் கற்றுக்கொள்வேன். இது ஆரம்பம் மட்டுமே என்பதால் என்னுடைய கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறேன். தோனி பாயிடம் கிரிக்கெட்டைப் பற்றிய சில விஷயங்கள், மனநிலை ஆகியவற்றை கேட்பேன். அவரிடம் சிறிய விஷயத்தை கற்றுக் கொண்டால் கூட எனக்கு உதவும்” என்று கூறினார்.