Dinesh Karthik : தோனியை தாண்டியும் 15 ஆண்டுகளாக ரசிகர்கள் என்னைப்பற்றி நினைக்க இதுவே காரணம் – தினேஷ் கார்த்திக்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

karthik
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் அணியில் அவ்வப்போது இடம் பிடிப்பது நிராகரிக்கப்படுவதும் என்றே இருந்தார். தற்போது இந்த உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது :

டந்த 15 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம் இன்னும் மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது நல்ல சூழ்நிலையும் சரி, எனது மோசமான சூழ்நிலையிலும் சரி மக்கள் என்னைப் பற்றி பேசுவதற்கு காரணம் எனது ஆட்டமே மேலும் எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரது ஆதரவின் காரணமாகவும் ஆசீர்வாதங்களும் காரணமாக என்னால் இத்தனை ஆண்டுகள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வரமுடிகிறது.

Karthik

தோனி அறிமுகமான பின்னர் எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆடி வருகிறேன். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்டத்திறனை நான் இப்போதுள்ள இளம் வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றி உள்ளேன். எனவே இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி மேலும் ஓய்வு அறையில் இளம் வீரர்களான பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் உடன் ஓய்வு அறையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement