இனிமே இவர் தலைகீழா நின்னாலும் இந்திய அணியில் விளையாட சேன்ஸே கிடையாது – பி.சி.சி.ஐ தகவல்

Karsan
- Advertisement -

சமீபகலாமாகவே இந்திய அணி தொடர்ச்சியாக திறமையுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. அதனால் பல இளம்வீரர்கள் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வகையான அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போதும், இங்கிலாந்து தொடங்கும் போதும் ஏகப்பட்ட புதுமுக வீரர்கள் இந்திய அணியில் விளையாட அறிமுக வாய்ப்பு கிடைத்தது.

IND-1

- Advertisement -

ஆனாலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதில் வருத்தம் இருக்கிறது. அந்த வகையில் ஜெய்தேவ் உனட்கட் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தான் தேர்வாவேன் என்றும் ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார். கடந்து 2019-20 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி சீசனில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி சௌராஷ்டிரா அணியை தனிநபராக இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இதனால் நிச்சயம் அவருக்கு இந்த சீசனில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி வந்தார். ஆனால் அவருக்கு இந்த இங்கிலாந்து தொடரிலும் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இது குறித்து பேசிய சௌராஷ்டிரா அணியின் பயிற்சியாளரான கர்சன் காவ்ரி கூறியதாவது : ரஞ்சி கோப்பையில் இறுதிப் போட்டி நடைபெறும் போது நான் பிசிசிஐ அணி தேர்வாளர் ஒருவரிடம் ஜெய்தேவ் உனட்கட் இந்த தொடரில் 60 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார் அதனால் அவருக்கு இந்திய ஏ அணியிலாவது ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தேன்.

Unadkat

ஆனால் அதற்கு தேர்வாளர் என்னிடம் இந்திய அணிக்கு மீண்டும் ஜெய்தேவ் உனட்கட் தேர்வாக வாய்ப்பே இல்லை. நாங்கள் சில வீரர்களை மட்டுமே கண்காணித்து வருகிறோம் அந்த பட்டியலில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு தற்போது வயது ஆகிவிட்டது இனிமேல் அவருக்கு வாய்ப்பு தர முடியாது. இந்த விடயம் ஒன்றுதான் இந்திய அணியில் இடம் பிடிக்க விடாமல் அவரை தடுக்கிறது என்று அந்த நிர்வாகி கூறியதாக கர்சன் காவ்ரி கூறியுள்ளார்.

unadkat

இதனால் இனிமேல் இந்திய அணிக்கு ஜெய்தேவ் உனட்கட் தேர்வாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க தொடரின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு பின்னர் இந்திய அணியில் வாய்ப்பு மீண்டும் கிடைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 29 வயதாகும் ஜெய்தேவ் உனட்கட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement