- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்காக பிரதமரையே பாக்க முடியாதுன்னு சொன்ன.. கவாஸ்கர் 1970களின் சாம்பியன் பிளேயர்.. கர்சன் கவ்ரி

இந்திய கிரிக்கெட்டில் தற்சமயத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் நட்சத்திர பேட்ஸ்மேன்களாக அறியப்படுகிறார்கள். அவர்களுக்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் மிகச்சிறந்த நட்சத்திர பேட்ஸ்மேன்களாக செயல்பட்டனர். அவர்களுக்கு முன்பாக விளையாடிய சுனில் காவாஸ்கர் இந்திய கிரிக்கெட்டின் முதல் மகத்தான பேட்ஸ்மேனாக அனைவராலும் போற்றப்படுகிறார்.

லிட்டில் மாஸ்டர் என்றழைக்கப்படும் அவர் 1970களில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். வெறித்தனமாக பவுலிங் செய்யக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை கவாஸ்கர் ஹெல்மெட் போடாமலேயே எதிர்கொண்டது இன்றளவும் ஆச்சரியமானதாகவே பார்க்கப்படுகிறது. அந்த காலத்திலேயே தரமான பவுலர்களை எதிர்கொண்ட கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

- Advertisement -

பிரதமரை பாக்காத கவாஸ்கர்:

அதனால் 1970களில் சுனில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டாராக இருந்தார் என்றால் மிகையாகாது. இந்நிலையில் ஒருமுறை இந்தியாவின் அப்போதைய பிரதமர் மொரர்ஜி தேசாய் அவர்கள் கவாஸ்கரை பார்ப்பதற்காக வந்ததாக கர்சன் கவ்ரி கூறியுள்ளார். அப்போது இந்திய அணிக்காக பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்துவதால் பிரதமரையே பார்க்க முடியாது என்று கவாஸ்கர் சொல்லி விட்டதாகவும் கவ்ரி தெரிவித்துள்ளார்.

1970களில் கவாஸ்கருடன் இணைந்து விளையாடிய முன்னாள் வீரரான கவ்ரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருமுறை டெல்லி பெரோசா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் முடிந்ததும் இந்தியாவுக்காக சுனில் காவாஸ்கர் பேட்டிங் செய்யத் தயாரானார். அதற்கு முன்பாக அவர் உடை மாற்றும் அறையில் அமர்ந்து தன்னை ஒருமுகப்படுத்திக் கொண்டிருந்தார்”

- Advertisement -

சாம்பியன் பிளேயர் கவாஸ்கர்:

“பேட்டிங் செய்ய செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக எங்களிடம் வந்த மேனேஜர் ராஜ் சிங், “நம்முடைய பிரதமர் இங்கே வந்துள்ளார். அவருக்கு உங்களை அறிமுகப்படுத்த உள்ளேன். அதற்கு 2 – 3 நிமிடங்கள் தேவைப்படும்” என்று சொன்னார். அதனால் அனைவரும் பிரதமரை காணச் சென்றோம். ஆனால் கவாஸ்கர் நான் வரவில்லை என்று சொல்லி விட்டார்”

இதையும் படிங்க: கவாஸ்கரின் அக்கறையை விராட், ரோஹித் அவமதிக்காம.. மதிச்சு அதை கேட்கணும்.. கர்சன் கவ்ரி அறிவுரை

“என்னை பேட்டிங்கில் கவனம் செலுத்த விடுங்கள். என்னுடைய அணிக்காக பேட்டிங் செய்வது மற்ற அனைத்தையும் விட முக்கியம் என்று கவாஸ்கர் சொன்னார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கவாஸ்கர் தேனீர் இடைவெளி வரை விளையாடி கொஞ்சம் ரன்கள் அடித்தார். கடைசியில் தான் அன்றைய நாளில் பிரதமர் கவாஸ்கரை பார்க்க வந்துள்ளார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. அப்படித்தான் கவாஸ்கர் தனது உச்சத்தில் இருந்தார். 1971 – 1987 வரை அவர் சாம்பியன் பிளேயராக இருந்தார்” என்று கூறினார்.

- Advertisement -