நல்லவேளை வருண் சக்ரவர்த்தி எஸ்கேப் ஆகிட்டாரு.. மோசமான சாதனையில் முதலிடத்திற்கு சென்ற – கரீம் ஜனத்

Karim Janat
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்கிற இலக்கினை 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளையும் மட்டும் இழந்து எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

கரீம் ஜனத் நிகழ்த்திய மோசமான சாதனை :

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களையும், ஜாஸ் பட்லர் 50 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களையும், ஜெய்ஸ்வால் 70 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அறிமுகமான ஆப்கானிஸ்தான் வீரரான கரீம் ஜனத் இந்திய வீரரான வருண் சக்கரவர்த்தியின் மோசமான சாதனை ஒன்றினை பின்னுக்கு தள்ளி பரிதாப சாதனையை நிகழ்த்தினார். அந்தவகையில் புரிந்த மோசமான சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்த போட்டியில் அறிமுகமான கரீம் ஜனத் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யும் பொது பத்தாவது ஓவரினை வீசினார். அப்படி அவர் வீசிய முதல் ஓவரிலேயே 30 ரன்களையும் விட்டுக்கொடுத்தார். அவரது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 30 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியின் முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை கரீம் ஜனத் நிகழ்த்தினார்.

இதையும் படிங்க : தோத்தாலும் பிரைன் லாராவை ஃபாலோ பண்ணுங்க.. அப்பா அம்மா கவனமா இருக்கனும்.. சூர்யவன்சிக்கு பிஷப் அட்வைஸ்

அவருக்கு முன்னதாக வருண் சக்கரவர்த்தி தான் அறிமுகமான ஐ.பி.எல் போட்டியின் முதல் ஓவரில் 25 ரன்கள் கொடுத்திருந்ததே மோசமான சாதனையாக இருந்த வேளையில் தற்போது அந்த சாதனையை கரீம் ஜனத் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement