தோத்தாலும் பிரைன் லாராவை ஃபாலோ பண்ணுங்க.. அப்பா அம்மா கவனமா இருக்கனும்.. சூர்யவன்சிக்கு பிஷப் அட்வைஸ்

Ian Bishop
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற 47வது போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய ராஜஸ்தான் 15.5 ஓவரிலேயே 212/2 ரன்களை எடுத்து மிரட்டலான வெற்றியைப் பெற்றது.

அந்த வெற்றிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி 35 பந்தில் சதமடித்து 101 (38) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரராக சாதனை படைத்த அவர் அறிமுகமான முதல் பந்திலயே சிக்சர் அடித்தார். இருப்பினும் அறிமுகப் போட்டியில் அரை சதத்தை அடிக்காததால் அவர் கண்ணீர் மல்க வெளியேறினார்.

- Advertisement -

லாராவை பாருங்க:

ஆனால் அதற்கெல்லாம் அசராத வைபவ் இப்போட்டியில் அதற்கும் சேர்த்து உலக சாதனை சதத்தை அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றிப் பெற வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்தப் போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் அதற்கெல்லாம் பின் வாங்காத பிரைன் லாராவை இந்திய வீரர் வைபவ் பின்பற்ற வேண்டுமென்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சதத்தால் அவருக்கு நிறைய பாராட்டும் புகழும் கிடைக்கும் என்று பிஷப் கூறியுள்ளார்.

அதற்கு மயங்காமல் சூர்யவன்சியை அவர்களுடைய பெற்றோர்கள் தொடர்ந்து இப்படியே நன்றாக வளர்க்க வேண்டும் என்றும் பிஷப் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது ராகுல் டிராவிட்டுக்கு முற்றிலும் புதிய பிரதேசம். வைபவின் பெற்றோர்களுக்கும் புதிய பிரதேசம். அடுத்தப் போட்டியில் விளையாடும் போது வைபவ் சந்திக்கப் போகும் சோதனை மிகப் பெரியதாக இருக்கும்”

- Advertisement -

பிஷப் அட்வைஸ்:

“ஒருவேளை அந்தப் போட்டியில் வைபவ் அடிக்காமல் போனால் எதிர்ப்பாளர்கள் கிளம்புவார்கள். அப்போது நீங்கள் தோல்வியை சமாளிப்பது முக்கியமாக இருக்கும். வரலாற்றில் தோல்விகளை சிறப்பாக கையாண்டு வெற்றியைப் பெற்ற வீரர்களில் பிரைன் லாரா நான் பார்த்தவர்களில் சிறந்தவர். நானும் அவரும் 14 – 15 வயது முதலே ஒன்றாக விளையாடத் துவங்கினோம்”

இதையும் படிங்க: ஸ்கூல் பையன் சூர்யவன்சி அடிச்சது கிரேட் ஐபிஎல் சதம்.. 4 வருட பழைய வீரர்களை நொறுக்கிட்டாரு.. பொல்லாக் பாராட்டு

“லாரா தோல்வியை தன் முதுகிலிருந்து ஓட விடாமல் அதை வைத்தே முன்னேறும் திறனைக் கொண்டிருந்தார். வைபவ் பெற்றோர்கள் அற்புதமானவர்களாக இருக்கக்கூடும். இப்போது அவர்கள் அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும். குறிப்பாக தற்போது வைபவ் எட்டியுள்ள அற்புதமான உயரம் சரிந்து விடாமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் அவரை அடுத்த 5 வருடங்கள் கவனித்துக் கொள்வது அவசியம். சொல்லப்போனால் அவர்கள் வைபவ் இங்கிருந்து புதிய உச்சத்தை தொடுவதற்கு உதவ வேண்டும்” என்று கூறினார்.

Advertisement