உழைத்தால் சச்சினாகலாம். இல்லைனா அவரைப்போல் வீணாகிடுவீங்க – இளம் வீரர்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்

Kapil
- Advertisement -

இந்தியாவில் இன்று கிரிக்கெட் என்ற விளையாட்டு ஆலமரமாய் உயர்ந்து நிற்பதற்கு 1983இல் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையை ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வென்ற தருணம்தான் ஆழமாக விதை போட்டது. அதிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் வெறும் 180 என்ற குறைவான இலக்கை வைத்து க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து உலக கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான அணி ஒட்டுமொத்த இந்தியாவையும் கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீது திரும்பிப் பார்க்க வைத்தது.

kapildev

- Advertisement -

அன்றிலிருந்து நிறைய இளம் வீரர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் பேட்டையும் பந்தையும் கையில் எடுத்த காரணத்தாலேயே இன்று உலக அளவில் கிரிக்கெட்டில் இந்தியா ஒரு இன்றியமையாத அணியாக மாறுவதற்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக ஒரு ஆல்ரவுண்டராகவும் கேப்டனாகவும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் பல பரிணாமங்களை கொண்ட ஜாம்பவான் கபில்தேவ் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலருக்கும் ஒரு ரோல் மாடலாக அமைந்தார்.

உழைப்பே உயர்வு:
இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் ஒரு மகத்தான வேகப்பந்து வீச்சு ஆல் – ரவுண்டராக கருதப்படும் கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்கள் 400+ விக்கெட்டுகள் எடுத்த ஒரே அற்புதமான ஆல்-ரவுண்டராக சாதனை படைத்தவர். அந்த அளவுக்கு தரமான அவரை பார்த்து அன்று முதல் இன்று வரை நிறைய இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்காற்ற வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இளம் கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே ஒருசில வெற்றிகளுக்குப் பின் ஓய்ந்து விடாமல் கடினமாக உழைத்து பெரிய அளவில் வரவேண்டும் என்று இளைஞர்களுக்கு ஜாம்பவான் கபில்தேவ் அறிவுரை தெரிவித்துள்ளார்.

kapildev

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் அதிகம் பேசுவதை நம்பாமல் செயலில் காட்டுவதையே நான் நம்புவேன். நீங்கள் ஆர்வமாக இருந்தால் போதும் கண்டிப்பாக சாதிக்க முடியும். எனது காலத்தில் நான் இளைஞனாக பயிற்சி எடுக்கும்போது பகல் இரவு என பாராமல் விளையாடுவேன். மேலும் என்னால் ஏன் இரவு முழுவதும் விளையாட முடிவதில்லை என்று ஆச்சரியப்படுவேன். ஏனெனில் ஒரு விஷயத்தை நீங்கள் அதிகமாக விரும்பினால் நேரம் காலம் உட்பட அனைத்தையும் மறந்துவிட்டு நீங்கள் அதையே விரும்பி செய்வீர்கள்” என்று உத்வேக வார்த்தைகளை கூறினார்.

- Advertisement -

உழைத்தால் சச்சின்:
மேலும் விளையாட்டில் கடினமாக உழைத்தால் சச்சினை போல வரலாம் இல்லையேல் அவரது நண்பர் வினோத் காம்ப்ளி போல் காணாமல் போய் விடும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்று மிகச் சிறந்த எடுத்துக்காட்டையும் கபில்தேவ் கூறினார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் இளைஞர்கள் மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக தேவையற்ற விஷயங்களை செய்கின்றனர். ஆனால் எதன்மீது நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கிறீர்களோ அதை விரும்பி உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று நான் நம்புகிறேன்.

Kambli

அந்த வகையில் திறமை மற்றும் கடின உழைப்பு ஆகிய இரண்டிற்கும் சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாவார். அதேபோல் நீங்கள் திறமையாக இருந்து கடினமாக உழைக்கவில்லை என்றால் அதன்பின் வினோத் காம்ப்ளி சென்ற வழியில் தான் செல்ல வேண்டும். எனவே உங்களின் லட்சியம் அழகாக இருந்தால் அதற்கான பாதை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல மும்பையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் – வினோத் காம்ப்ளி பள்ளி பருவத்தில் ஒரு மிகச் சிறந்த நண்பர்களாக கிரிக்கெட் விளையாடினார்கள். அதிலும் ஒரு போட்டியில் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் போட்டது அந்த காலத்தில் பள்ளி வயது கிரிக்கெட்டில் ஒரு சாதனையாக இருந்தது. அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட இருவருமே காலடி வைத்த நிலையில் தனது திறமையை கடினமாக உழைத்து பட்டை தீட்டிய சச்சின் டெண்டுல்கர் இன்று உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளே கிடையாது.

மறுபுறம் அவரைப்போலவே திறமை வாய்ந்த வினோத் காம்ப்ளி வெறும் 14 இன்னிங்ஸ்சில் 1000 ரன்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இன்று வரை படைத்துள்ளார். ஆனால் அந்தத் திறமையை மேற்கொண்டு கடினமாக உழைத்து பட்டை தீட்டாத அவர் பல தவறான வழிகளில் சென்று காணாமல் போய்விட்டார்.

இதையும் படிங்க : தோனிக்கு கிடைத்த சப்போர்ட் சேவாக், ஹர்பஜன் போன்ற எங்களுக்கு கிடைக்கல – நட்சத்திர முன்னாள் வீரரின் குமுறல்

குறிப்பாக சமீபத்தில் கூட மது போதையில் வேகமாக காரை ஓட்டி போலீசால் கைதானது, வங்கி மோசடி புகார் போன்ற தவறுகளை செய்து தனது பெயருக்கு தனக்கு தானே களங்கம் விளைவித்து கொண்டார். எனவே திறமையான இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் சச்சினை போல் உழைத்து பெரிய அளவில் வரவேண்டும் என்று கபில் தேவ் கூறினார்.

Advertisement