விராட் கோலி தலைமையில் கில்லியா இருந்த டீம் இப்ப கெட்டு போச்சு, அவங்கள பாத்து கத்துக்கோங்க – ரோஹித்துக்கு கபில் தேவ் அட்வைஸ்

Kapil Dev 7
- Advertisement -

கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் தோனி விடை பெற்ற 2014இல் சொந்த மண்ணில் மட்டும் அணியாக தர வரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வளர்த்து தம்முடைய ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்தார். குறிப்பாக அவரது தலைமையில் 2019ஆம் ஆண்டு சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக சரித்திரம் படைத்த இந்தியா மற்றொரு சவாலான இங்கிலாந்து மண்ணில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அது போக தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாடுகளில் நிறைய வெற்றிகளை பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணிகளை தெறிக்க விடும் அணியாக வலம் வந்த இந்தியா விராட் கோலி கேப்டன் பதிவிலிருந்து விலகியதிலிருந்தே தடுமாறி வருகிறது. குறிப்பாக கேப்டனாக அவர் பதவி விலகிய பின் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் பும்ரா தலைமையில் படுதோல்வியை சந்தித்த இந்தியா சவாலான இங்கிலாந்து மண்ணில் சரித்திரம் படைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பறிகொடுத்தது.

- Advertisement -

கபில் தேவ் அட்வைஸ்:
மறுபுறம் ஜோ ரூட் பதவி விலகிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையை பின்பற்றும் இங்கிலாந்து சொந்த மண்ணில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளை அடித்து நொறுக்கி பாகிஸ்தானை பந்தாடி சமீபத்திய ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து சமன் செய்தது. அந்த வகையில் தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிரட்டும் இங்கிலாந்து உலகின் இதர அணிகளுக்கு எடுத்துக்காட்ட திகழ்கிறது என்றே சொல்லலாம்.

ஆனால் விராட் கோலி தலைமையில் ஆக்ரோஷமாக செயல்பட்ட இந்திய அணியை தான் தற்போது இங்கிலாந்து பின்பற்றுவதாக நிறைய இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி அல்லது தோல்வியை சந்திப்போமே தவிர ட்ரா என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற கோட்பாட்டுடன் விராட் கோலி கேப்டன்ஷிப் செய்ததாலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்சமயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமின்றி சாதாரணமாக விளையாடி வருவதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ட்ராவிற்காக விளையாடாமல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளையாடும் இங்கிலாந்து அணியின் அணுகுமுறையை ரோகித் சர்மா பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“பஸ்பால் அற்புதமாக இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சமீப காலங்களில் நான் பார்த்த தொடர்களில் மிகவும் சிறந்த ஒன்றாகும். என்னை கேட்டால் கிரிக்கெட்டை அவ்வாறு தான் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா நன்றாகவே செயல்படுகிறார். ஆனால் அவர் இன்னும் சற்று அதிக ஆக்ரோசத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து போன்ற அணிகள் தற்போது எவ்வாறு விளையாடுகிறது என்பதை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்”

இதையும் படிங்க:அடுத்த ரெய்னா கிடைச்சாச்சு, சுரேஷ் ரெய்னாவுக்கும் திலக் வர்மாவுக்கும் இடையே 7 ஒற்றுமைகள் – இதை பாத்தீங்களா

“நாம் மட்டுமல்ல. கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் அந்த அணுகுமுறையை பின்பற்றி விளையாட வேண்டும். ஏனெனில் ட்ராவை சந்திக்க வேண்டும் என்பதற்கு பதிலாக வெற்றி பெற வேண்டும் என்பதே அனைத்து அணிகளுக்கும் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் கொஞ்சமும் போராடாமல் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement