ஹார்டிக் பாண்டியா நல்ல ஆல்ரவுண்டர் தான். ஆனா அவரோட பிரச்சனையே இதுதான் – கபில் தேவ் விளக்கம்

Kapil
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக பந்து வீசாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டு இந்திய அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆனால் சற்றும் மனம் தளராத ஹர்டிக் பாண்டியா இந்திய அணியில் இருந்து சிறிது காலம் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் தனது பிட்னஸில் கவனம் செலுத்தினார்.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

அதன் பிறகு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான கம்பேக் கொடுத்த அவர் பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி அருமையான கேப்டன்சியையும் செய்து குஜராத் அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை அறிமுக ஆண்டிலேயே பெற்றுக் கொடுத்து சாதனை படைத்தார்.

அதனை தொடர்ந்து இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்த பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் தற்போது ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் 17 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடி இருந்தார்.

Hardik Pandya 2

இப்படி சமீபத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அற்புதமான ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் பாண்டியாவிற்கு பிட்னஸ் மட்டும் தான் ஒரே பிரச்சினையாக வரும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : பாண்டியா ஒரு மிகச் சிறப்பான ஆல் ரவுண்டர் தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

அவரைப் போன்ற ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இருப்பது எப்போதுமே அதிக பலத்தை தரும். ஜடேஜா, பாண்டியா போன்ற வீரர்கள் அணிக்கு நல்ல பேலன்சை தருவார்கள். ஹர்திக் பாண்டியாவை நினைத்து தற்போது பெருமைப்படுகிறேன். ஏனெனில் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : தோல்விக்கு பின் விராட் கோலிக்கு ஹாங்காங் வீரர்கள் கொடுத்த நெஞ்சை பரிசு – பாராட்டும் இந்திய ரசிகர்கள்

ஆனால் என்னுடைய வருத்தம் மற்றும் கவலை எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான். அவர் அடிக்கடி காயத்தில் சிக்கினால் அது மொத்த அணியும் காயமடைந்த மாதிரி தான் என கபில்தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement