MS Dhoni : தோனிக்கு நாம் இதனால் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும் – கபில் தேவ்

கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர். கடந்த ஆண்டு முழுவதும் தோனி சரியாக ஆடாததால்

kapil3
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அனைவரும் விமர்சித்து வந்தனர். கடந்த ஆண்டு முழுவதும் தோனி சரியாக ஆடாததால் தோனியை அணியில் இருந்து விலகவும், உலகக்கோப்பையில் இடம் கிடைக்காமல் இருக்கவும் அனைவரும் விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

ஆனால், 2019 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார் தோனி. அதனை தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளிலும் தோனி சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் தோனி குறித்து தனது கருத்தினை தெரிவித்தார்.

அதில் கபில் தேவ் கூறியதாவது : தோனியை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. கடந்த 15 வருடங்களாக இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பணிகள் மிக அதிகம். ஐ.சி.சி நடத்திய அனைத்து தொடர்களையும் இந்திய அணிக்காக பெற்று தந்தவர். பல ஆண்டுகளாக இந்திய அணியை வழிநடத்தியவர் தோனி போன்ற பல தனி சிறப்புகளை தோனி தன்வசம் வைத்துள்ளார்.

MSdhoni

தோனி எவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடுவார் என்று அவருக்கு மட்டுமே தெரியும். இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பணிகள் அதிகம். அவரைப்போல இன்னொருவர் இந்திய அணிக்கு பங்களிக்க வருவார்களா ? என்று தெரியவில்லை. உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரை வென்று இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கபில் தேவ் கூறினார்.

Advertisement