இந்த வருஷம் அவர் மட்டும் ஐ.பி.எல் ஆடுனா அவரை நம்ம டீம்லயே சேக்க கூடாது – கபில் தேவ் காட்டம்

kapil dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தோனியின் தலைமையில் ஐசிசி கோப்பையை வென்ற பிறகு கடந்த பல ஆண்டுகளாக ஒரு ஐசிசி தொடரையும் கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நடைபெற்று வரும் ஐசிசி கோப்பைகளை தவறவிட்டு வரும் இந்திய அணி மீது பெரிய விமர்சனமே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் எதிர்வர இருக்கும் டி20 உலக கோப்பை என இரண்டு கோப்பைகளையும் குறி வைத்து தற்போது அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்திய அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Kuldeep Yadav Ind Shubman gill kl rahul

- Advertisement -

அந்த வகையில் தற்போது இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் முன்னணி வீரரான பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் நியூசிலாந்து தொடரிலும் இடம்பெறவில்லை. அதேபோன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை.

ஆசியக்கோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் என முக்கியமான தொடர்களில் அவர் இந்திய அணியில் விளையாட முடியாமல் வெளியே இருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான முக்கிய வீரராக பார்க்கப்படும் அவர் எப்பொழுது அணிக்குள் வருவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவருக்கும் மத்தியிலும் எழுந்துள்ள வேளையில் தற்போது இந்த விவகாரம் குறித்து முன்னாள் கேப்டனான கபில் தேவ் தனது காட்டமான விமர்சனம் ஒன்றினை முன்வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

Jasprith Bumrah vs KKR

பும்ராவை பொறுத்தவரை அவர் இந்திய அணியை விட ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனை சொல்ல கஷ்டமாக இருந்தாலும் அவரது போட்டிகளின் கணக்க எடுத்துப் பார்த்தாலே உங்களுக்கு உண்மை தெரியும். சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டும் அவர் டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலியா தொடர் என பல்வேறு பெரிய தொடர்களில் விளையாடவில்லை.

- Advertisement -

ஆனால் கடந்த ஆண்டு முழு ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடியிருந்தார். ஒருவேளை இந்த சீசனிலும் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 14 போட்டிகளில் மொத்தமாக விளையாடினால் அவரை இந்திய அணியில் சேர்க்காமல் இருப்பது தான் நியாயம் என கபில் தேவ் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மிகவும் அரிதான வைரம் உங்களுக்கு கிடைச்சுருக்கு விட்ராதிங்க, இளம் வீரரை பாராட்டிய டாம் மூடி – இந்திய அணிக்கு கோரிக்கை

அவர் கூறியது போலவே இந்திய அணி கடந்தாண்டு 32 டி20 போட்டிகளில் விளையாடியதில் பும்ரா 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பெரும்பாலான போட்டிகளை காயத்தால் அவர் தவறவிட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் முழுமையாக மும்பை அணிக்காக அவர் விளையாடியிருந்தார். எனவே இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடினால் நிச்சயம் அவரை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்று கபில் தேவ் கூறிய கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement