- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6 மாசத்துக்கு முன்னாடி செஞ்சதை மறந்துட்டு.. இங்க உட்காந்துகிட்டு பேசாதீங்க.. கேப்டன் ரோஹித் பற்றி கபில் தேவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று முன்னிலை பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு இந்திய அணியினர் சுமாராக பேட்டிங், பவுலிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்தது.

அதை விட ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தாக்கத்தை ஏற்படுத்தாதது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் பேட்ஸ்மேனாக தனது ஓப்பனிங் இடத்தை ராகுலுக்கு விட்டுக் கொடுத்த அவர் மிடில் ஆடரில் விளையாடினார். ஆனால் அந்த வாய்ப்பில் 20 ரன்கள் கூட எடுக்காத அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதே போல கேப்டனாகவும் அவர் பும்ராவை சரியாக பயன்படுத்தாதது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

விமர்சனத்தில் ரோஹித்:

அதனால் பேசாமல் பும்ராவே கேப்டனாக செயல்படலாம் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் ரோகித் மீண்டும் ஓப்பனிங் விளையாடி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அவருக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ரோகித் சர்மா எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஏற்கனவே பல வருடங்களாக தன்னை நிரூபித்தவர். எனவே யாரையும் சந்தேகப்பட வேண்டியதில்லை. நான் அவரை சந்தேகப்பட மாட்டேன். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். அது தான் முக்கியம். இப்படி சில சுமாரான செயல்பாடுகள் வரும் போது நன்றாக செயல்பட்டவரின் கேப்டன்ஷிப்பை நீங்கள் சந்தேகப்படுவீர்கள்”

- Advertisement -

கபில் தேவ் ஆதரவு:

“6 மாதத்திற்கு முன்பாக அவர் டி20 உலகக் கோப்பை வென்ற போது இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை ரோகித் தொடர்ந்து சிறப்பாக விளையாடாமல் போனால் அவர் தாமாக அணியில் இருக்க மாட்டார். அதைத் தவிர்த்து நான் என்ன சொல்ல முடியும். ஆனால் திறமை கொண்ட அவர் கம்பேக் கொடுக்கக் கூடியவர்”

இதையும் படிங்க: தப்பு ரெண்டு பேர் மேலையும் இருக்கு.. சண்டையிட்ட ஹெட் – சிராஜுக்கு 2 தண்டனைகளை அறிவித்த ஐசிசி

“இங்கே அமர்ந்து கொண்டு ராணா அல்லது ஆகாஷ் தீப் ஆகியோரில் யார் அடுத்த போட்டியில் விளையாட வேண்டும் என்று என்னால் எப்படி மதிப்பிட முடியும். நம்முடைய வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். இதை அடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இந்திய அணியினர் பயிற்சிகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -