தோனியை விமர்சிப்பது தவறு. அப்படி விமர்சிப்பவர்களுக்கு நான் கூறுவது இது மட்டும் தான் – கபில் தேவ் ஆதரவு

kapil3
- Advertisement -

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் தடைபட்டதால் மீதமுள்ள ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது .மேலும் மீதமுள்ள 3.5 அவர்கள் இன்று வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nz

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட தோனியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த தொடரில் தோனியை தொடர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்குள் நான் கூறுவது இது மட்டும் தான் நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.

தோனிக்கு ஒன்றும் 20 வயது கிடையாது .அவர் தற்போது வயது முதிர்ந்த வீரர் இருப்பினும் அவருடைய வேகம் விக்கெட் கீப்பிங்கில் குறையவில்லை இதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அதே போன்று பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி உள்ளார். ஒரு பெரிய வீரர்களிடமிருந்து அபாரமான ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு கிடையாது.

Dhoni-1

ஆனால் அதை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பதுதான் தவறு தோனி அணிக்கு தேவையான அவற்றை ஆட்டம் தோறும் செய்து வருகிறார். அதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று தான் வருகிறது. மேலும் அவரிடம் இருந்து இனிமேலும் அபாரமான ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு இந்திய அணி வெற்றிகரமாக முடிப்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். அதை அவர் சிறப்பாகவும் செய்து வருகிறார் என்று டோணிக்கு ஆதரவாக கபில்தேவ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement