இந்த ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக இவர் ஜெயிக்க 25% வாய்ப்பு மட்டுமே இருக்கு – கபில்தேவ் கருத்து

kapil3

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் போது இந்திய வீரரும் டெல்லி அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப ஆறு மாத காலம் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

Pant

அப்போது டெல்லி அணியின் மூத்த வீரர்களான ரஹானே, அஸ்வின், ஸ்மித் ஆகிய மூவரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி அணியின் நிர்வாகம் கடந்த பல தொடர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஒரு விஷயத்தை நம்பி இந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.

சமீபகாலமாகவே ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா இங்கிலாந்து என அடுத்தடுத்த தொடர்களில் இழந்த தனது பார்மை மீட்டு எடுத்த அவர் ஒரு முதிர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார். எனவே அவரை இந்த வருட கேப்டனாக நியமித்திருக்கிறது. இந்நிலையில் அவரிடம் ஒரு அணியை வழிநடத்தும் அளவிற்கு ஆற்றல் இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

rishabh-pant

இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் எவ்வாறு கேப்டன்சி செய்வார் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் ஆல் கோப்பையை பெற்றுக் கொடுக்க முடியுமா என்றால் 25 முதல் 26 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அவ்வளவுதான் ஏனெனில் மற்ற அணிகளின் கேப்டன்கள் இவரை விட அனுபவம் வாய்ந்தவர்கள். ரிஷப் பண்ட் புது கேப்டன் இன்னும் கேப்டனாக அவர் நிறைய விடங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

- Advertisement -

ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பதால் ஒரு திறமையான கேப்டனாக அவர் மாறுவார் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது தான் அவருடைய கேப்டன்சி திறன் குறித்து துல்லியமாக பேச முடியும் கடந்த. 2016 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக வழிநடத்தி இருந்தாலும் ஐபிஎல் வேறு ரஞ்சி கோப்பை வேறு. அதனால் இந்த தொடரில் அவர் கேப்டன்சி எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Pant

மேலும் ஐபிஎல் தொடரில் திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருப்பார்கள். அவர்களை அனுசரித்து வழிநடத்த வேண்டும். தொடர்ந்து இரண்டு போட்டியில் தோற்றால் கூட கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படும் அதே வகையில் அவர் பேட்டிங்கிலும் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது. இதுபோன்ற அழுத்தங்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.