இந்திய அணியின் தலைசிறந்த ஆல்டைம் ஒருநாள் அணியை வெளியிட்ட கபில் தேவ் – கேப்டன் யார் தெரியுமா ?

Kapil-dev-2
- Advertisement -

இந்திய அணிக்காக முதல் முதலாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் கபில்தேவ். இவர்தான் முதன்முதலாக இந்தியாவிற்கு கிடைத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். அவரது பல சாதனைகள் தற்போது வரை முடிக்கப்படாமல் இருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் இவர். இவருக்கு இணையான ஆல்ரவுண்டர் தற்போது வரை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

kapildev

- Advertisement -

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார் கபில்தேவ். அந்த அணியில் பலரும் இந்த வருடங்களில் விளையாடிய வீரர்கள் இல்லை. ரோஹித் சர்மாவிற்கு அந்த அணியில் இடம் கொடுக்கவில்லை. இவரது அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குகின்றனர் .

இந்த இருவரும் சேர்ந்து இந்திய அணிக்காக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடக்க வீரர்களாக களம் இறங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் ஜாம்பவான் விராட் கோலி 4-வது இடத்திற்கு இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இடம் பிடித்துள்ளார். பின்னர் 5 ஆவது இடத்தில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், 6-வது இடத்தில் விக்கெட் கீப்பர் தோனி இடம் பிடித்திருக்கிறார் இவர் தான் இந்த அணியின் கேப்டனாக இருக்கிறார்.

Dhoni-1

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத், ஜாகீர்கான் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரும் இடம் பிடித்திருக்கின்றனர். இந்த அணியில் ரோகித் சர்மா, சௌரவ் கங்குலி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Bumrah

கபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி :

1. சச்சின் தெண்டுல்கர், 2. விரேந்திர சேவாக், 3. விராட் கோலி, 4. ராகுல் டிராவிட், 5. யுவராஜ் சிங், 6. எம்எஸ் டோனி(கேப்டன்), 7. ஜவஹல் ஸ்ரீநாத், 8. ஜாகீர் கான், 9. அனில் கும்ப்ளே, 10. ஹர்பஜன் சிங், 11. பும்ரா.

Advertisement