- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிராக பும்ராவை வெச்சு.. ரோஹித் செஞ்சு இந்த தப்பு தோல்வியை கொடுத்துருக்கலாம்.. கபில் தேவ்

ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முக்கிய போட்டியில் பாகிஸ்தானை வித்தியாசத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டு 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு மடக்கிப் பிடித்தது. அதன் காரணமாக ஆல் அவுட்டான டி20 போட்டியில் முதல் முறையாக வெற்றி கண்டு இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. அந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

ரோஹித்தின் தவறு:
இந்நிலையில் அந்த போட்டியில் வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே முதன்மை பவுலரான பும்ராவை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அந்த முடிவு இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கும் கபில் தேவ் இது பற்றி ஏபிபி செய்தியில் பேசியது பின்வருமாறு. “அடுத்த முறை இந்த கேள்வியை நான் கேப்டனிடம் கேட்பேன்”

“ஏனெனில் அந்த செயல்பாட்டின் பின்னணியை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கிரிக்கெட்டில் நான் விளையாடிய அல்லது பார்த்து அனுபவத்தை வைத்து இதை சொல்வதாக வைத்துக் கொள்வோம். பும்ரா முதல் ஓவரை வீசியிருக்க வேண்டும். விக்கெட் எடுக்கக்கூடிய பவுலரான அவரை 2வது அல்லது 3வது அல்லது 5, 6வது ஓவரில் பயன்படுத்தினால் போட்டி உங்களுடைய கையிலிருந்து சென்று விடும்”

- Advertisement -

“எனவே பும்ரா அப்போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை துவங்கி ஆரம்பத்திலேயே 2 ஓவர்களை வீசி சில விக்கெட்டுகளை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லையேல் நம்முடைய அணி தடுமாற்றத்தை சந்தித்திருக்கும். அப்படி செய்திருந்தால் மற்ற இளம் பவுலர்களின் நிலைமையும் எளிதாக மாறியிருக்கும். அதற்காக சில நேரங்களில் பும்ரா அடி வாங்கக்கூடும்”

இதையும் படிங்க: அதை ஏற்கனவே செஞ்ச எங்களுக்கு இந்தியா சாதாரணம்.. தோற்கடிக்க திட்டம் இருக்கு.. அமெரிக்க வீரர் சவால்

“ஆனால் நீங்கள் மிகுந்த நேர்மறையான மனதுடன் திட்டத்தை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். முன்னதாக அந்தப் போட்டியில் அரஷ்தீப், சிராஜ் ஆகியோருக்கு 1, 2வது ஓவரை வழங்கிய ரோகித் சர்மா 3வது ஓவரை தான் பும்ராவுக்கு வழங்கினார். ஆனால் அதிலும் அற்புதமாக செயல்பட்ட பும்ரா கேப்டன் பாபர் அசாமை கேட்ச் கொடுக்க வைத்தார். இருப்பினும் அதை துபே தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -