
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 36 வயதை தாண்டி விட்டனர். அதனால் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்கள்.
அதில் தற்போது 36 வயதாகும் விராட் கோலி நல்ல ஃபிட்னஸ் கடை பிடிப்பதால் 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் கொஞ்சம் சுமாரான ஃபிட்னஸை கொண்டுள்ள ரோஹித் சர்மா 37 வயதை கடந்துள்ளார். எனவே அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொதுவாக 26 – 34 வயதுடன் பெரும்பாலான வீரர்களின் உச்சகட்ட நல்ல காலம் முடித்து விடும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதைத் தாண்டி எந்தளவுக்கு ஃபிட்னஸ் கடை பிடிக்கிறோமோ அந்தளவுக்கு மட்டுமே அசத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல 40 வயது வரை சச்சின் விளையாடிய நிலையில் ரவி சாஸ்திரி 30 வயதிலேயே காயத்தால் ஓய்வு பெற்றதாகவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா எவ்வளவு காலம் விளையாடுவார்கள் என்பது அவருடைய ஃபிட்னஸ் மற்றும் தனிப்பட்ட வாழ்வியலை பொறுத்தது என்று கபில் தேவ் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கருத்துப்படி 26 முதல் 34 வருடங்கள் உங்களுடைய முதன்மை நாட்களாக இருக்கும்”
“அதன் பின் வீரர்களின் ஃபிட்னஸ் தான் அவர்கள் விளையாடும் காலத்தை தீர்மானிக்கிறது. ரவி சாஸ்திரி தன்னுடைய ஆரம்ப வயதிலேயே ஓய்வு பெற்று விட்டார். மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடினார். எனவே ஓய்வு என்பது தங்களின் சொந்த வாழ்வை பொறுத்து தனிநபர்கள் நிர்ணயிக்க வேண்டிய முடிவாகும்”
இதையும் படிங்க: படிப்பறிவில்லாத பாகி நிர்வாகிகள்.. இந்தியாவை பாத்து இதை விஷயத்தை செஞ்சாவே முன்னேறிடலாம்.. பசித் அலி விளாசல்
“எந்தளவுக்கு ஃபிட்டாக தொடர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களோ அந்தளவுக்கு நீண்ட காலம் அசத்தலாக விளையாட முடியும் என்பதே என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார். எப்படி இருந்தாலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய ரசிகர்களின் விருப்பமாகும்.