- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஸ்வின் கொஞ்சம் அவசரப்படாம இதை செஞ்சுருக்கலாம்.. பாதியில் ஓய்வானது சோகமா இருக்கு.. கபில் தேவ் வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவு பெற்றார். 2010 – 2024 இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அத்துடன் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக டெஸ்ட் தொடர்நாயகன் விருதுகளையும் வென்றுள்ள அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருப்பதற்கும் அஸ்வின் முக்கிய பங்காற்றினார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் நிறைய சாதனைகளை படைத்து இந்தியாவின் சாம்பியன் வீரராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் வெளிநாடுகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வந்தது.

- Advertisement -

கபில் தேவ் ஆதங்கம்:

அதன் காரணமாக வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு 38 வயதில் கடந்த ஆஸ்திரேலிய தொடருடன் அஸ்வின் ஓய்வு பெற்றார். அவருடைய ஓய்வு இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே இப்படி ஓய்வு பெற்றது தமக்கு சோகத்தை கொடுத்ததாக ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் இன்னும் சில வருடங்கள் விளையாடி மேலும் சாதனைகளை படைத்து வழியனுப்பும் போட்டியுடன் சொந்த மண்ணில் விடை பெற்றிருக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். இது பற்றி கபில் தேவ் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் மிகவும் வலுவான மனம் கொண்ட பையன். அவரைப் போன்ற குணமுடைய கிரிக்கெட்டர்கள் இருப்பதைப் பார்ப்பது நன்றாக உள்ளது”

- Advertisement -

சோகமான ஓய்வு:

“அப்படிப்பட்ட அவர் சுற்றுப் பயணத்தின் பாதியிலேயே ஓய்வு பெற்றதால் நான் கொஞ்சம் சோகமாக உணர்ந்தேன். அவர் இந்தியா உருவாக்கிய ஒரு மகத்தான வீரர். அவர் விளையாட்டில் சிறப்பாக வேலை செய்தார். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து வித்தியாசமாக செய்திருக்கலாம். அதே சமயம் அவர் நாட்டுக்காக செய்தது நம்ப முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித், கில்லை தொடர்ந்து 8 ஆண்டுக்கு பிறகு முக்கிய முடிவை கையிலெடுத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

இது போக இன்னும் சில முன்னாள் வீரர்கள் அஸ்வினை இந்திய அணி மரியாதையுடன் நடத்தவில்லை என்று விமர்சித்தார்கள். இதைத் தொடர்ந்து அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார். 2010, 2011 கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல உதவிய அவர் மீண்டும் 2015க்குப்பின் இந்த வருடம் தம்முடைய சொந்த மாநில அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -