பாகிஸ்தானை தோற்கடிச்சு காட்டுங்க.. அவங்கள மாதிரி ஆளுங்கள கண்டுக்காதீங்க.. இந்திய அணிக்கு கபில் தேவ் அட்வைஸ்

Kapil Dev
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கும் அந்தப் போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் இந்தியா வெளியேற வேண்டும் என்று ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

- Advertisement -

அவங்களை கண்டுக்காதீங்க:

அதில் 26 அப்பாவி மக்கள் இயற்கை எழுதியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதாக இருந்தது. அப்போது இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட்டில் விளையாடலாமா? என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விமர்சித்தனர்.

அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி வெளியேறியது. அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் இந்தியா விளையாடுவதில் தடையில்லை என்று இந்திய விளையாட்டுத் துறை அறிவித்தது.

- Advertisement -

கபில் தேவ் அட்வைஸ்:

அதே சமயம் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹர்பஜன் போன்றவர்களின் கருத்துகளைக் காதில் வாங்காமல் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்துக் காட்டுங்கள் என்று இந்திய அணியை ஜாம்பவான் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது. “இந்திய வீரர்கள் போட்டியில் மட்டுமே கவனத்துடன் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ரோஹித் கிடையாது.. அந்த 2 இந்திய ஜாம்பவான்கள் தான் என்னோட ரோல் மாடல்.. வருங்கால கேப்டன் கில் பேட்டி

“அவர்கள் நல்ல அணி என்பதால் கண்டிப்பாக வெல்ல வேண்டும். நம்முடைய வீரர்கள் தங்களுடைய செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மற்ற விஷயங்களால் கவனத்தைச் சிதற விடக்கூடாது. களத்திற்கு சென்று விளையாடி வெல்லுங்கள். அரசு தங்களுடைய வேலையை செய்துள்ளார்கள். எனவே நம்முடைய வீரர்கள் நாட்டுக்காக தங்களுடைய வேலையை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement