ரோஹித் கிடையாது.. அந்த 2 இந்திய ஜாம்பவான்கள் தான் என்னோட ரோல் மாடல்.. வருங்கால கேப்டன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

பஞ்சாப்பை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் வருங்கால ஆல் ஃபார்மட் கேப்டனாக அறியப்படுகிறார். 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அப்படியே சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினார்.

அப்போதிலிருந்தே கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி வரும் கில் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் விராட், ரோஹித்தை முந்தி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து தருகிறார். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை கழற்றி விட்ட பிசிசிஐ அவரை கேப்டனாக நியமித்தது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த அவர் இந்தியா தொடரை சமன் செய்யும் உதவினார்.

- Advertisement -

சுப்மன் கில்லின் 2 ரோல் மாடல்கள்:

அதனால் தற்போது ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் விரைவில் இந்தியாவின் முழுமையாக தலைமைத் தாங்க உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் தம்முடைய ரோல் மாடல்கள் என்று கில் கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலியை போல தாமும் செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியில் அதிகமாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் விராட் கோலி தமக்கு நிறைய உத்வேகத்தைக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு 2 ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். முதல் நம்பர் சச்சின் டெண்டுல்கர். என்னுடைய தந்தைக்குப் பிடித்த அவரைப் பார்த்தே நான் கிரிக்கெட்டுக்குள் வந்தேன்”

- Advertisement -

கிங் கோலியின் உத்வேகம்:

“இருப்பினும் அவர் 2013இல் ஓய்வு பெற்று விட்டார். மறுபுறம் நான் 2011 – 2013 காலகட்டங்களில் தான் கிரிக்கெட்டை முறையாக புரிந்துகொள்ளத் துவங்கினேன். குறிப்பாக திறமை மட்டுமின்றி மனதளவிலும் தந்திரபாயங்கள் அடிப்படையிலும் கிரிக்கெட்டை புரிந்துகொள்ளத் துவங்கினேன். அதே காலத்தில் நான் விராட் கோலியை நெருக்கமாக கவனிக்கத் துவங்கினேன்”

இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்த உலகின் பெஸ்ட் ஸ்பின்னர் உட்பட.. அந்த 5 பாகிஸ்தான் வீரர்களே போதும்.. மைக் ஹெசன்

“அவர் தன்னுடைய தொழிலில் நடந்து கொண்ட விதம், விளையாட்டின் மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வம், வெற்றிப் பெற வேண்டும் என்ற பசியை முன்னோக்கி எடுத்துச் சென்ற விதம் ஆகியற்றைப் பார்த்து நானும் விரும்பினேன். பொதுவாக நீங்கள் அனைத்து திறன் மற்றும் நுட்பங்களை கற்றுக் கொள்ளலாம். ஆனால் வெற்றிக்கான பசி என்பது உங்களிடம் இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். விராட் அதை ஏராளமாக வைத்திருந்தார். அது எனக்கு உத்வேகமளித்தது” என்று கூறினார்.

Advertisement