- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி 150 கிலோ தூக்கலாம்.. ஆனா இதை வெச்சே ரோஹித் இந்தியாவை ஹேப்பியாக்குறாரு.. கபில் தேவ்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி லீக் மற்றும் சூப்பர் 8 தொட்டில் அசத்தவில்லை. இத்தனைக்கும் ஐபிஎல் 2024 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருந்த அவரை இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் துவக்க வீரராக களமிறக்கியது. இருப்பினும் அந்த வாய்ப்பில் அவர் சூப்பர் 8 சுற்று வரை அரை சதம் கூட அடிக்கவில்லை.

மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அரை சதமடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். அதற்கடுத்த போட்டிகளில் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்ட ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தார். அப்போட்டியில் 7 பவுண்டரி 8 சிக்சரை பறக்க விட்ட அவர் சுயநலமின்றி 92 (41) ரன்னில் அவுட்டாகி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கபில் தேவ் பாராட்டு:
இந்நிலையில் பொதுவாகவே ஆக்ரோஷமாக கொண்டாடக்கூடிய விராட் கோலி எளிதாக 150 கிலோ 250 கிலோ தூக்கி ஃபிட்டாக இருப்பதால் நன்றாக விளையாடுவதாக ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய வரம்புகளை அறிந்து செயல்படுவதில் விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்தவர் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

அதனால் 1 பேக்’கை வைத்துக்கொண்டே ரோகித் சர்மா அசால்டாக பெரிய சிக்சர்களை அடிப்பதாகவும் கபில் தேவ் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏபிபி நியூஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 150 கிலோ முதல் 250 கிலோ பளுவை தூக்கினால் அதை ரோஹித் சர்மாவும் செய்ய வேண்டும் என்று அவசியமமில்லை. ரோஹித் சர்மா தன்னுடைய ஆட்டத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளதாக தெரிகிறது”

- Advertisement -

“அவர் தமக்குள்ளேயே விளையாடுகிறார். அவர் விராட் கோலியை போல உயரே துள்ளி குதித்து அங்கேயும் இங்கேயும் ஓடுவதில்லை. ரோகித் சர்மா தன்னுடைய வரம்புகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறார். அந்த அம்சத்தில் விராட் கோலி உட்பட யாரும் அவரை விட சிறந்தவர் கிடையாது. ரோஹித் சர்மா பெரிய சிக்சர்களை அடிக்க ஒரு பேக் போதுமானது”

இதையும் படிங்க: அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த போதும் சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் – விவரம் இதோ

“இங்கே பல பெரிய வீரர்கள் வந்து தங்களை வைத்தே கேப்டன்ஷிப்பும் செய்துள்ளனர். ஆனால் அவர்களை விட ரோகித் சர்மா ஒரு எக்ஸ்ட்ரா கட்டத்தை நிரப்புகிறார். ஏனெனில் அவர் மொத்த இந்திய அணியையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்” என்று கூறினார். அந்த வகையில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா சிறந்தவர் என்று ஜாம்பவான் கபில் தேவ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -