பாக் அதை சரி பண்றத விட்டுட்டு.. 20 வருடமாக ஐசிசியில் அசத்தும் இந்தியாவை குறை சொல்லாதீங்க.. கபில் தேவ் சாடல்

Kapil Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பை 2025 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா தங்களுடைய கடைசி போட்டிக்கு முன்பாகவே சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதனால் தங்களை ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்துள்ள இந்தியா ஆசியக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா அணி கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர்.

- Advertisement -

குறை சொல்லாதீங்க:

அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கை கொடுக்காமல் இந்தியா வெளியேறியது. ஆனால் கை கொடுக்க வந்த தங்களிடம் ஜென்டில்மேனாக நடந்து கொள்ளாத இந்திய அணியை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக இந்திய கேப்டன் சூரியகுமாரை பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானா விமர்சித்தார்.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் இந்தியா சிறப்பாக விளையாடுவதாக ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். எனவே இம்முறையும் ஆசியக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால் இந்தியாவை குறை சொல்லாமல் கிரிக்கெட்டில் முன்னேறும் வழியைப் பார்க்குமாறு அவர் பாகிஸ்தானை சாடியுள்ளார்.

- Advertisement -

கபில் தேவ் சாடல்:

இது பற்றி கபில் தேவ் பேசியது பின்வருமாறு. “அதெல்லாம் சிறிய விஷயம். ஒருவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் கைகுலுக்க விரும்பவில்லை என்றால் அதை இரு தரப்பும் பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காக தவறான அறிக்கைகள் கொடுப்பது சரியானதல்ல. ஆனால் சில நேரங்களில் கிரிக்கெட்டர்கள் கொடுக்கும் அறிக்கைகள் சர்ச்சையாகிறது”

இதையும் படிங்க: ஓமன் அணிக்கெதிரான போட்டியிலாவது இதை செய்யுங்க.. சஞ்சு சாம்சனுக்காக ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ

“பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. எனவே அவர்கள் அதில் வேலை செய்ய வேண்டும். கை குலுக்குவது அல்லது கட்டிபிடிப்பது ஆகியவை ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய அணி கடந்த 20 வருடங்களுக்கு மேல் சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக ஐசிசி தொடர்களில் அவர்கள் நன்றாகவே விளையாடி வருகிறார்கள். நம்முடைய கிரிக்கெட் ஒழுங்கமைக்கப்பட்டது. எனவே இந்திய அணி 2025 ஆசியக் கோப்பை வெல்லும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்

Advertisement