பெங்களூரு அணிக்கெதிரான வெற்றிக்கு இந்த ஒரு விடயமே காரணம் – கேன் வில்லியம்சன் ஹேப்பி

Williamson
- Advertisement -

நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான 52-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்களும், அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்களும் குவித்தனர்.

srhvsrcb

- Advertisement -

அவர்களைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறிய சன் ரைசர்ஸ் அணி இறுதியில் தட்டு தடுமாறி 141 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டாப் 2 இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் நிச்சயம் இந்த இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சன் ரைசர்ஸ் அணியின் அபார பந்து வீச்சு காரணமாக 20 ஓவர்களின் முடிவில் அவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில் :

Maxwell

இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு மிகவும் கடினமாக சென்றது. இருப்பினும் சில முன்னேற்றங்கள் ஆங்காங்கே தென்பட்டன. நாங்கள் இந்த இறுதி நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளோம். இந்த இலக்கு இந்த போட்டிக்கு சற்று சவாலானதாகவே இருக்கும் என்றே நினைத்தோம். அதன்படி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளோம். நாங்கள் பேட்டிங்கில் கிடைத்த பாட்னர்ஷிப்பை பெரிதுபடுத்த முடியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ரொம்ப தெளிவா இருந்தோம். ஆனா இவரோட விக்கெட் விழுந்தது தான் நாங்க தோக்க காரணம் – கோலி வருத்தம்

ஆனாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக மேக்ஸ்வெல்லின் ரன்அவுட் இந்த போட்டியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. பெங்களூரு அணி மிகச் சிறப்பான ஒரு அணியாக தற்போது விளங்கி வருகிறது. அவர்களுக்கு எதிராக இது போன்ற ஒரு போட்டி அருமையாக இருந்தது. இந்த போட்டியை வென்றது சிறப்பான ஒன்று என வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement