IND vs NZ : இந்த ஒரு விஷயம் நடந்தா ஜெயிக்க முடியும்னு நெனச்சோம். அது பளிச்சிருச்சி – கேன் வில்லியம்சன் மகிழ்ச்சி

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவிக்கவே 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக கேன் வில்லியம்சன் 94 ரன்களையும், டாம் லாதம் 145 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில் : முதல் பாதியின் போது இந்த இலக்கை துரத்த முடியும் என்று நினைத்தோம்.

tom Latham IND vs NZ

அதே வேளையில் மைதானமும் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்த போது சற்று திரும்பியது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். அதே வேளையில் இந்த மைதானத்தில் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தால் நிச்சயம் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் துரத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம்.

- Advertisement -

அந்த வகையில் டாம் லாதம் அருமையான ஆட்டத்தை இந்த போட்டியில் விளையாடினார். அவர் வந்து என்னுடன் அமைத்த பாட்னர்ஷிப் போட்டியை திருப்பியது. அதோடு போட்டியின் கடைசி கட்டத்தில் ஒரு ஓவரில் பெரிய அளவில் ரன்கள் வந்ததால் போட்டி எங்கள் பக்கம் முழுவதுமாக வந்தது. இன்றைய போட்டியில் டாம் லாதம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : ஆயிரம் இருந்தாலும் ஒன்டே’ல கில்லி தான், உ.கோ சான்ஸ் தாராளமா கொடுக்கலாம் – ஷ்ரேயாஸ் படைத்த வரலாற்று சாதனை இதோ

நான் பார்த்த அவருடைய சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. இறுதிவரை களத்தில் இருந்து நாங்கள் வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி. இந்த வெற்றியை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement