கடைசி ஓவர்ல இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல. குஜராத் அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய – கேன் வில்லியம்சன்

Williamson
- Advertisement -

நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் படு சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியும் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் அளித்தது என்று கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது தங்களது அதிரடியான பேட்டிங் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 195 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களையும், மார்க்ரம் 46 ரன்களை குவித்து அசத்தினார்கள். அதனைத் தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு குஜராத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Abishek Sharma

- Advertisement -

பெரிய சேஸ் என்பதனால் துவக்கத்திலிருந்தே அடித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தினால் குஜராத் அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாட போட்டி களைகட்டியது. ஆனாலும் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்த இறுதி நேரத்தில் குஜராத் அணி தோல்வியை நோக்கி நகர்ந்தது.

இருப்பினும் கடைசி 3 ஓவர்களில் திவாத்தியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் சுதாரித்து தங்களது அதிரடியை வெளிக்காட்டி குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது திவாட்டியா ஒரு சிக்சரும், ரஷீத் கான் 3 சிக்சர் என அந்த ஓவரில் 25 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

Rahul tewatia Rashid Khan

கிட்டத்தட்ட தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குஜராத் அணி கடைசி ஓவரில் போட்டியை வென்றது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அதிஷ்டம்யின்மை காரணமாக கடைசி ஓவரில் போட்டியை இழந்த சன் ரைசர்ஸ் அணியின் வீரர்கள் மைதானத்தில் பெரிதும் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தோல்வி குறித்து பேசியுள்ள சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில் :

- Advertisement -

இது ஒரு அற்புதமான போட்டி. 40 ஓவர்கள் முழுவதும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றுள்ளோம். இதன் காரணமாக நாங்கள் இந்த தோல்வியை நினைத்து கவலை கொள்ளபோவதில்லை. குஜராத் ஒரு சிறப்பான அணி எனவே சிறந்த அணியிடம் தான் நாங்கள் தோற்று உள்ளோம். இந்த போட்டியில் குஜராத் அணியின் வீரர்கள் அற்புதமாக செயல்பட்டனர்.

இதையும் படிங்க : மலிங்காவை தொடர்ந்து ஐ.பி.எல் வரலாற்றில் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய உம்ரான் மாலிக் – விவரம் இதோ

ரஷீத் கான் ஏற்கனவே இந்த தொடரின் ஒரு போட்டியில் தனது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருந்தார். அதே ஆட்டத்தை தற்போது எங்களுக்கு எதிராகவும் ஆடியுள்ளார். கடைசி ஓவரில் யான்சன் மோசமாக பந்துவீசி இருந்தாலும் அடுத்த போட்டியில் அவர் பலமாக திரும்பி வருவார் என்று வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement