அஷ்வின் எவ்ளோ ஸ்பின் பண்ணுவாருன்னு எனக்கு தெரியும். அதனால் தான் தப்பிச்சேன் – வில்லியம்சன் ஓபன்டாக்

Williamson
- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதால், 1999ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி நடத்திய தொடரில் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது நியூசிலாந்து அணி. ஒரு நாள் மற்றும் டி20 உலக கோப்பைக்கு இணையாக பார்க்கப்பட்ட இந்த தொடரில் வென்றதையடுத்து நியூசிலாந்து அணியையும், அதன் கேப்டனான கேன் வில்லியம்சனையும் முன்னாள் வீரர்கள் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ள அந்த அணியின் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்த இறுதிப் போட்டியின்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய நாளிதழ் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் கேன் வில்லியம்சனும் போட்டியின்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

indvsnz

- Advertisement -

வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஐந்து வேகப் பந்து வீச்சாளர்களுடன் களிமிறங்கும் முடிவை எடுத்து தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை போட்டிக்கு முன்பே நிரூபித்த கேன் வில்லியம்சன், இரண்டு இன்னிங்சுகளிலும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை வெற்றி பெறவும் வைத்தார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது தான், அந்த அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக இருந்தது. தற்போது பேட்டியளித்திருக்கும் அவர், இரண்டாவது இன்னிங்சில் தனக்கு அம்பயர் அவுட் கொடுத்ததைப் பற்றியும் அதிலிருந்து டிஆர்எஸ் முறையில் தான் எப்படி தப்பித்தேன் என்றும் கூறியுள்ளார்.

அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டாம் லதாமின் விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வின் அடுத்து வந்த கேன் வில்லியம்சனையும் தனது துல்லியமான பந்து வீச்சில் திணறடித்தார். அவருடைய ஓவரில் கேன் வில்லியம்சனுக்கு, LBW முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து டிஆர்எஸ் எடுத்தார் கேன் வில்லியம்சன். அதில் பந்தானது லெக் ஸ்டெம்பிற்கு வெளியே சென்றுள்ளது என தெரிந்ததால், வில்லயம்சன் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கூறியிருக்கும் அவர்,

nz

முதலில் எனக்கும் அது அவுட் என்றுதான் தோன்றியது. அந்த அளவிற்கு அது மிக க்ளோசாக இருந்தது. ஆனால் அஷ்வின் எந்த அளவிற்கு பந்தை ஸ்பின் செய்வார் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகவே நினைத்தேன். எனவே தான் நான் டிஆர்எஸ் எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

taylor

அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வேவின் விக்கெட்டையும், விரைவிலேயே அஷ்வின் வீழ்த்தி இருந்தாலும் அடுத்த வந்த ராஸ் டெய்லரையும், ஏற்கனவே விளையாடிக் கொண்டிருந்த வில்லியம்சனையும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement