முதல் நியூசிலாந்து வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய கேன் வில்லியம்சன் – வரலாற்று சாதனை விவரம் இதோ

Williamson
- Advertisement -

கடந்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணியை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது.

வரலாற்று சாதனையை நிகழ்த்திய வில்லியம்சன் :

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கிரிஸ்ட்சர்ச் நகரில் துவங்கி நடைபெற்று வரும் வேளையில் இந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் மீண்டும் அந்த அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது அவர் அணியில் இடம் பிடித்திருந்தாலும் காயம் காரணமாக மூன்று போட்டியிலுமே பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாட முடியாமல் போனது. இவ்வேளையில் காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்திருக்கும் அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸின் போது 93 ரன்களை குவித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி சார்பாக ஒன்பதாயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் இன்று நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதுவரை ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்திருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து அதிக ரன்கள் குறித்து நியூசிலாந்து வீரராக ராஸ் டெய்லர் 7683 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : அடிச்சி சொல்றேன்.. அடுத்த வருஷம் விராட் கோலி தான் ஆர்.சி.பி கேப்டன்.. ஏன் தெரியுமா? – அஷ்வின் விளக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் வில்லியம்சன் காயம் காரணமாக ஒரு பெரிய இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே இப்படி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement