அடிச்சி சொல்றேன்.. அடுத்த வருஷம் விராட் கோலி தான் ஆர்.சி.பி கேப்டன்.. ஏன் தெரியுமா? – அஷ்வின் விளக்கம்

Ashwin-and-Kohli
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்த ஏலத்தில் பத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

அடுத்த வருஷம் கோலி தான் ஆர்.சி.பி கேப்டன் :

இதன் காரணமாக இந்த ஏலமானது ரசிகர்கள் மத்தியிலும் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தியது. இந்த ஏலத்தில் இதுவரை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றாத பெங்களூரு அணியும் கலந்து கொண்டு இம்முறை சிறப்பான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் ஏலம் முடிவடைந்த பின்னர் யார் அந்த அணியின் கேப்டனாக இருப்பார்கள்? என்கிற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இவ்வேளையில் இம்முறை சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தான் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்முறை பெங்களூரு அணி மிகச் சிறப்பாக ஏலத்தில் கலந்து கொண்டு அருமையான வீரர்களை வாங்கியுள்ளதாக கருதுகிறேன்.

அணியின் பேலன்ஸ் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சரியான முறையில் பணத்தை பயன்படுத்தி மிகச்சரியான வீரர்களை வாங்கி இருக்கிறார்கள். இருந்தாலும் ஆர்.சி.பி அணியில் கேப்டன்சி அனுபவம் உடைய ஒரு வீரரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதன் காரணமாக நிச்சயம் விராட் கோலி தான் அடுத்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

- Advertisement -

ஏனெனில் விராட் கோலியிடம் இருக்கும் அனுபவம், கேப்டன்சி திறமை போன்றவற்றை அந்த அணியின் மற்ற வீரர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. எனவே நிச்சயம் அனுபவ வீரரான அவர்தான் அடுத்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தான் உறுதியாக நம்புவதாக அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலியை பாத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் இதை கத்துக்கனும் – ரிக்கி பாண்டிங் கருத்து

நடைபெற்று முடிந்த இந்த ஏலத்தில் பெங்களூரு அணி வெளிநாட்டு வீரர்களாக ஜாஷ் ஹேசல்வுட், டிம் டேவிட், பிலிப்ஸ் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், நுவான் துஷாரா, ரோமாரியோ ஷெப்பர்டு, ஜேக்கப் பெத்தல் போன்ற அருமையான வீரர்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement