விராட் கோலியை பாத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் இதை கத்துக்கனும் – ரிக்கி பாண்டிங் கருத்து

Smith-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே பெரியளவில் ரன்களை குவிக்காமல் தடுமாறி வந்த வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்து இந்திய அணி பெரிய குவிப்பை வழங்கவும், அதன் மூலம் வெற்றியை அடையவும் ஒரு முக்கிய பங்காற்றி இருந்தார்.

விராட் கோலியை பாத்து கத்துக்கோங்க :

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டிற்கு மேல் சதம் அடிக்காமல் இருந்து வந்த அவரது பயணம் இந்த சதத்தின் மூலம் முடிவுக்கு வந்ததோடு சேர்த்து இந்த ஆஸ்திரேலியா தொடரை அவர் எவ்வாறு அணுகப்போகிறார் என்பது குறித்த தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. இனிவரும் போட்டிகளிலும் விராட் கோலி அசத்தம் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி இந்த தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி அந்த போட்டியின் சூழலை எவ்வாறு கணித்து விளையாடினாரோ அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் அணுக வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் உடனடியாக தவறை திருத்திக் கொண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் இரண்டாவது இன்னிங்சின் போது அவர் மிகச்சிறப்பாக மீண்டும் வந்து தனது 30-ஆவது சதத்தை அடித்துள்ளார். விராட் கோலி எப்போதுமே அவருடைய திறன்களை உறுதியாக நம்புகிறார். அதன் காரணமாகத்தான் அவரால் மீண்டும் மிகச்சிறப்பாக கம்பேக் கொடுத்து அற்புதமாக விளையாட முடிகிறது. விராட் கோலி அவரது திறமை மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளார்.

இதையும் படிங்க : பிரைன் லாரா மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

அதேபோன்று ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோர் விராட் கோலியை போன்று அவர்களது திறமை மீது நம்பிக்கை வைத்து சூழ்நிலை பற்றி பயப்படாமல் விளையாடினால் அவர்களாலும் ரன் குவிக்க முடியும். எந்த ஒரு பெரிய தொடர்களிலுமே சாம்பியன் பிளேயர் போன்று விராட் கோலி விளையாட அவரது திறனும் அவர் திறன் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் தான் காரணம் என ரிக்கி பாண்டிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement