- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட வில்லியம்சன் – என்ன காரணம்?

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

கேன் வில்லியம்சன் விளையாடுவது சந்தேகம் :

இந்த தொடரானது வரும் அக்டோபர் 12-ஆம் தேதி முடிவடையுள்ள வேளையில் அதற்கடுத்த 4 நாட்களிலேயே அக்டோபர் 16-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் நியூசிலாந்து அணி தற்போது தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இந்திய அணி எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நியூசிலாந்து அணி ஏற்கனவே சிக்கலில் இருக்கும் வேளையில் இடுப்பு வலி காரணமாக கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2026க்கு நானும் ரோஹித் ப்ராண்டை தான் ஃபாலோ பண்ணப் போறேன்.. புதிய திட்டம் பற்றி சூரியகுமார் பேட்டி

மேலும் மருத்துவக்குழு அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதால் அவர் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான மார்க் சேப்மேனை களமிறக்க அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -