2026க்கு நானும் ரோஹித் ப்ராண்டை தான் ஃபாலோ பண்ணப் போறேன்.. புதிய திட்டம் பற்றி சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அக்டோபர் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. முன்னதாக ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா கழற்றி விடப்பட்டு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூரியகுமார் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ரோஹித் சர்மாவின் பாதையை தாமும் பின்பற்ற உள்ளதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ரிங்கு சிங் போன்ற பேட்ஸ்மேன்களை பகுதி நேர பவுலர்களாக உருவாக்கி திடமான அணியை உருவாக்குவதே தம்முடைய திட்டம் என்றும் சூரியகுமார் கூறியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் சர்மா வழி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கான்பூர் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ததை பார்த்த போது டி20 தொடர் துவங்கி விட்டதாக உணர்ந்தேன். அது ரோகித் சர்மாவின் கச்சிதமான ஸ்டைல் அணுகுமுறை. 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட பின்பும் சில அணிகள் மட்டுமே வெற்றிக்காக போராடும். அந்த வகையில் கான்பூரில் வென்றது சிறந்த கேப்டனுக்கு எடுத்துக்காட்டாகும்”

“கேப்டன்ஷிப் பற்றி ரோகித் சர்மாவிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். அதை என்னுடைய வேலையில் செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன். பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் எனக்கு ஸ்பெஷல் உறவு இருக்கிறது. என்னுடைய திறனுக்கு ஆதரவளித்தவர் என்பதை மறக்க மாட்டேன். சில நேரங்களில் நான் எதுவும் சொல்லாவிட்டாலும் அவர் என்னுடைய பாடி லாங்குவேஜ் அல்லது கண்களைப் பார்த்து புரிந்து கொள்வது மிகவும் ஸ்பெஷலாகும்”

- Advertisement -

சுயநலமற்ற வழி:

“பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சில் பங்களிப்பதை நான் பாராட்டுகிறேன். வீரர்கள் எக்ஸ்ட்ரா பொறுப்பேற்றுக் கொண்டு ஓரிரு ஓவர்கள் பந்து வீசுவது அணியை வலுப்படுத்துகிறது. அதனால் ஏதேனும் சில நாட்களில் பேட்டிங்கில் சுமாராக விளையாடும் வீரர்கள் ஆல் ரவுண்டர்களாக அணியின் வெற்றியில் பங்காற்ற முடியும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: 88க்கு ஆல் அவுட்.. ஆர்சிபி’யாக மாறிய இந்திய ரசிகர்கள்.. நியூஸிலாந்து தோல்வியால் நீடிக்கும் செமி ஃபைனல் பிரச்சனை

“அது நமது அணியை திடமாக உருவாக்கும். 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய கிரிக்கெட்டின் அதே பிராண்டை நாங்கள் தொடர விரும்புகிறோம். கிரிக்கெட்டின் பிராண்டை சுயநலமின்றி விளையாடினால் தொடர்ந்து வெற்றி காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார். அத்துடன் கடந்த களத்தில் இருந்த விராட் கோலி, தோனி போன்ற கேப்டன்களிடம் சரியான விஷயங்களை கற்றுக்கொண்டு கேப்டன்ஷிப் பதவியை மகிழ்ச்சியுடன் செய்வதாகவும் சூரியகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement