மச்சம் இருக்கு! தோனியின் ஆல் டைம் அதிர்ஷ்ட சாதனையை சமன் செய்த வில்லியம்சன் – முழு அலசல்

CSKvsSRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் உச்ச கட்ட பரபரப்பில் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்கொண்ட மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளை தவிர எஞ்சிய 8 அணிகள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இதில் புதிய அணிகளாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் மற்றும் லக்னோ அடுத்தடுத்த வெற்றிகளால் முதல் 2 இடங்களை பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டன. எஞ்சிய 2 இடத்திற்கு 6 அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

அதேசமயம் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரை வாங்கி கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்ட மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் முதல் 2 அணிகளாக சுற்றுடன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாகவும் அமைந்தது. இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் பைனல் உட்பட நாக் அவுட் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

டாஸ் வின் மேட்ச் வின்:
இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகள் இரவு நேரங்களில் நடைபெறுவதால் பனியின் தாக்கத்தை சமாளிப்பதற்காகவும் 2-வதாக பேட்டிங் செய்தால் இலக்கு என்ன என்பதை தெரிந்து அதை எளிதாக துரத்தி எட்டிப்பிடித்த விடலாம் என்ற நோக்கிலும் பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்றால் உடனடியாக ஒருதுளி கூட யோசிக்காமல் பந்து வீசுவதாக அறிவித்து விடுகிறார்கள். அதற்கேற்றார் போல் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் சேசிங் செய்யும் அணிகள் தான் வெற்றி வாகை சூடுகின்றன. அதேபோல் டாஸ் தோற்றதால் தோல்வியை சந்தித்தோம் என மும்பை போன்ற ஒருசில அணிகள் போட்டிகளின் முடிவில் வெளிப்படையாகவே பேசியதையும் பார்த்தோம்.

cskvsrcb

மொத்தத்தில் டாஸ் வென்றால் அந்தப் போட்டியை வென்று விடலாம் என்ற மனப்பான்மை பெரும்பாலான கேப்டன்கள் மற்றும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் களத்தில் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவது போல டாஸ் என்பது திறமை சம்பந்தப்பட்டது கிடையாது. ஏனெனில் ஒரு கேப்டன் நாணயத்தை சுண்டி விடும் போது பூவும் விழலாம் தலையும் விழலாம் என்ற நிலையில் அதற்கு முழுக்க முழுக்க அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் தேவைப்படுகிறது.

- Advertisement -

மச்சமுடைய வில்லியம்சன்:
அப்படி இந்த வருட ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிர்ஷ்டத்தின் உதவியால் அதிக டாஸ்களை வென்றுள்ளார். அதைப் பற்றி பார்ப்போம்.

williamson 1
Kane Williamson

1. இந்த வருடம் நடைபெற்ற முதல் 47 லீக் போட்டிகளில் 44 அதாவது 93.62% போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் எந்தவித தயக்கமுமின்றி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர். இது 2019, 2020, 2021 சீசன்களில் 70.57 சதவீதமாக இருந்தது.

- Advertisement -

2. இந்த முதல் 47 போட்டிகளில் அதிக பட்சமாக ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது முதல் 9 போட்டிகளில் 8 டாஸ் வென்றார். அதிலும் முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 7 டாஸ்களை வென்றார்.

csk vs srh

3. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக அதிக டாஸ்களை வென்ற கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அதை ஏற்கனவே எம்எஸ் தோனி 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளில் தலா 7 முறை தொடர்ச்சியாக டாஸ் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

4. அந்த 8 போட்டிகளில் ஹைதராபாத் 5 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அதிலும் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன்பின் டாஸ் உதவியுடன் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைந்தது.

RR vs KKR Sanju Samson Shreyas Iyer

5. சரி அப்படியானால் டாஸ் வென்றால் வெற்றி உறுதி என்று பார்த்தால் அப்படியும் கூற முடியாது. ஏனெனில் அதே முதல் 47 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் பங்கேற்ற 10 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 1 முறை மட்டுமே டாஸ் வென்ற 9 முறை தோற்றுப் போனார். ஆனால் அந்த 10 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி் கதை முடிந்தது, இனிமேல் அவர் தான் கிரிக்கெட்டின் கிங் – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

6. எனவே டாஸ் என்பது அதிர்ஷ்டம் என்றாலும் கிரிக்கெட் களத்தில் அதுவும் ஐபிஎல் போன்ற தரமான கிரிக்கெட் தொடரில் டாஸ் உதவியை மட்டும் நம்பாமல் திறமையையும் வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

Advertisement