காயத்தால் ஆடாமலேயே ஜெயிச்சு மாபெரும் சாதனை படைத்த கேன் வில்லியம்சன் – 2023 உ.கோ பற்றியும் வெளியான ஹேப்பி நியூஸ் இதோ

Williamson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா 2 – 0* (5) ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்விகளை சந்தித்து ஆஷஸ் கௌரவத்தை காப்பாற்ற அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் ஐசிசி தரவரிசைப்படி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால் முதல் போட்டியில் சதமடிக்காமல் அவர் குறைந்த ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து பெரிய ரன்களை குவித்தார். அதன் காரணமாக அவரை மிஞ்சிய ரூட் உலகின் புதிய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இங்கிலாந்துக்கு பெருமை சேர்த்தார். இருப்பினும் 2வது போட்டியில் 10, 18 என 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்து 5வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

- Advertisement -

அசத்திய வில்லியம்சன்:
அதே சமயம் லபுஸ்ஷேனும் 2வது போட்டியில் பெரிய ரன்களை எடுக்க தவறிய காரணத்தால் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி போது காயமடைந்து வெளியேறிய அவர் கடைசியாக கடந்த பிப்ரவரியில் இதே இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

அதன் பின் காயமடைந்து கடந்த சில மாதங்களாக எந்த விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருந்து வரும் அவர் இங்கிலாந்து தொடரில் வெளிப்படுத்திய சிறந்த செயல்பாடுகளின் பலனாக 883 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 2வது ஆஷஸ் போட்டியில் சதமடித்து 110 ரன்கள் குவித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 882 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து அவரை முந்துவதற்கு காத்திருக்கிறார். குறிப்பாக வில்லியம்சன் விளையாடாத நிலையில் 3வது போட்டியில் கணிசமான ரன்கள் அடித்தாலே ஸ்மித் புதிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வருவதற்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஆனால் அதுவரை விளையாட விட்டாலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கப் போகும் வில்லியம்சன் தற்போது காயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார். குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இந்தியாவில் வரும் அக்டோபரில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை பங்கேற்க மாட்டார் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் விரைவாக குணமடைந்து வருவதால் 2023 உலக கோப்பையில் பங்கேற்க முடியும் என்று நம்புவதாக கேன் வில்லியம்சன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் சில மாதங்களுக்குப் பின் முதல் முறையாக பேட்டை கையில் எடுத்துள்ள அவர் தன்னுடைய செல்ல மகளை பந்து வீசச் சொல்லி வீட்டில் பயிற்சிகளை தொடங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தை மிகச் சிறப்பாக வழி நடத்தி ஃபைனல் வரை அழைத்துச் சென்று தோற்காத போதிலும் ஐசிசியின் முட்டாள்தனமான விதிமுறையால் கோப்பையை வெல்ல முடியாத அவர் தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்திருந்தார்.

இதையும் படிங்க:சுப்மன் கில்லும் இல்ல.. ஜெய்ஸ்வாலும் இல்ல.. இந்திய அணியின் வருங்கால சூப்பர் ஸ்டார் அவர்தான் – வெங்கடேஷ் ஐயர் புகழாரம்

எனவே அப்படிப்பட்ட தரமான அவர் இந்த உலகக் கோப்பையில் வெளியேறினால் நியூசிலாந்துக்கு பெரிய பின்னடைவாக அமையலாம். அதனால் விரைவில் குணமடைந்து தங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதே இந்தியாவில் இருக்கும் அவருடைய ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Advertisement