முடிவுக்கு வந்த சாதனை பயணம், கேப்டன் பதவியை ராஜினாமா செய்த கேன் வில்லியம்சன் – காரணம் இதோ

Williamson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற டி20 தொடரை இழந்தாலும் ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அந்த அணி 2 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக வரும் டிசம்பர் 26 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் நியூசிலாந்து ரசிகர்கள் ஏமாற்றமடையும் வகையில் அந்த தொடருக்கு முன்பாக கேப்டன் கேன் வில்லியம்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 40 போட்டிகளில் 22 வெற்றிகளை பதிவு செய்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான நியூசிலாந்து கேப்டனாக வரலாற்று சாதனை படைத்தவர். அவரது தலைமையில் குறிப்பாக சொந்த மண்ணில் எதிரணிகளை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து 10 தோல்விகளை மட்டுமே பதிவு செய்தது.

- Advertisement -

அதை விட வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை லீக் சுற்றில் அவரது தலைமையில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து அணி இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதன் வாயிலாக வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற கேப்டன் என்ற காலத்திற்கும் அழிக்க முடியாத மகத்தான பெயரை பெற்றுள்ள கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேனாகவும் அபாரமாக செயல்பட்டுள்ளார்.

முடிந்த சாதனை பயணம்:
ஏனெனில் சாதாரண வீரராக 49.23 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ள அவர் கேப்டனாக 65 இன்னிங்ஸில் 57.43 என்ற அற்புதமான சராசரியில் ரன்களை குவித்து நியூசிலாந்தின் வெற்றிகளுக்கு பாடுபட்டுள்ளார். அந்த வகையில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

அதனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ள அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அவருடைய சாதனை பயணம் முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து சாதாரண வீரராக விளையாட காத்திருக்கும் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டது மிகப்பெரிய கௌரவமாகும். என்னைப் பொறுத்த வரை டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் உயிர்நாடியாகும். அதில் இத்தனை வருடங்களாக சவால்களைக் கடந்து மிகவும் மகிழ்ச்சியுடன் வழி நடத்தினேன். இருப்பினும் சமீப காலங்களில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் கேப்டன்ஷிப் நிறைய பணிச்சுமையை கொடுப்பதால் என்னுடைய கேரியரின் இந்த தருணத்தில் இந்த முடிவை எடுப்பது சரியானது என்று கருதுகிறேன். நியூசிலாந்து வாரிய நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து அடுத்த 2 வருடங்களுக்கு கேப்டனாக செயல்பட முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதை தொடர்ந்து அவருக்கு பதிலாக மற்றொரு நட்சத்திர அனுபவ மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ நியூசிலாந்தின் 31வது டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டாம் லாதம் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுக்க உள்ளதாகவும் வில்லியம்சன் கூறியுள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்கான நியூசிலாந்து அணி இதோ:

இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் க்ளீன் போல்டாகியும் அவருக்கு ஏன் விக்கெட் வழங்கவில்லை – ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன?

டிம் சௌதீ (கேப்டன்), மைக்கேல் ப்ரஸ்வெல், டாம் பிளண்டல் (கீப்பர்),டேவோன் கோன்வே, மாட் ஹென்றி, டாம் லாதாம், டார்ல் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜஸ் படேல், க்ளென் பில்லிப்ஸ், இஷ் சோதி, பிளேர் டிக்னெர், நெய்ல் வாக்னர், கேன் வில்லியம்சன், வில் எங்

Advertisement