ஷ்ரேயாஸ் ஐயர் க்ளீன் போல்டாகியும் அவருக்கு ஏன் விக்கெட் வழங்கவில்லை – ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன?

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி நேற்று சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே கே.எல் ராகுல், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டை இழந்து தடுமாறியது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

பின்னர் ரிஷப் பண்ட் ஐந்தாவது வீரராக களமிறங்கி 45 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அதன் பின்னர் அவரும் ஆட்டம் இழக்கவே ஒரு கட்டத்தில் இந்திய அணியானது 112 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது ஆறாவது வீரராக களம் புகுந்த ஷ்ரேயாஸ் ஐயர் புஜாராவுடன் பாட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில் புஜாரா ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் 84-ஆவது ஓவரை வீசிய வங்கதேச வீரர் எபோதட் உசைன் பந்துவீச்சில் ஐந்தாவது பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் இருந்த போது கிளீன் போல்ட் ஆனார். ஆனாலும் அவருக்கு அம்பயர் அவுட் கொடுக்காதது ஏன்? ஐசிசி அதற்கு கூறும் ரூல்ஸ் என்ன? என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

Shreyas Iyer 1

அந்த வகையில் ஐசிசி விதிப்படி 29.1 என்கிற விதிமுறையின் அடிப்படையில் பந்து ஸ்டம்பில் படும்போது ஸ்டம்பின் மேல் இருக்கும் ஒரு பெயில்ஸாவது கீழே விழுந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு பெயில்ஸ் விழுந்தாலோ அல்லது இரண்டு பெயில்ஸ் விழுந்தாலோ தான் பேட்ஸ்மேன் முழுமையாக ஆட்டம் இழந்ததற்கு சமம். அதன் பின்னரே அம்பயர் அவுட் என்று அறிவிப்பார்.

- Advertisement -

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் போல்ட்டான போது ஸ்டம்பில் இருந்த பெயில்ஸ் நகர்ந்ததே தவிர ஒரு பெயில்ஸ் கூட கீழே விழவில்லை. அதனால் அவர் ஆட்டம் இழக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டார். அதேபோன்று கண்ணுக்கு எதிராக பெயில்ஸ் நகர்வு மற்றும் பந்து ஸ்டம்பில் அடித்தது தெரிந்தும் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்றால் :

இதையும் படிங்க : இந்த 2022 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் யார் தெரியுமா? – நீங்க யோசிச்சிகூட பாத்திருக்கமாட்டீங்க

ஐசிசி விதிமுறைப்படி 29.5 என்கிற விதியின் அடிப்படையில் பந்து ஸ்டம்பில் பட்டது தெரிந்தும் பெயில்ஸ் கீழே விழவில்லை என்றால் களத்தில் இருக்கும் அம்பையர் அதனை நாட் அவுட் என்று தான் அறிவிக்க வேண்டும். அந்த வகையில் தான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அவுட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement