இந்த 2022 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் யார் தெரியுமா? – நீங்க யோசிச்சிகூட பாத்திருக்கமாட்டீங்க

Shreyas-Iyer-1
- Advertisement -

இந்திய அணியானது இந்த ஆண்டு பல்வேறு தொடர்களில் பங்கேற்று விளையாடி தங்களது மிகச் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தாவரப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி முடித்தது.

IND-vs-BAN

- Advertisement -

அதன் பின்னர் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நாம் இருக்கும் வேளையில் இந்த ஆண்டு இந்திய வீரர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் யார்? என்ற புள்ளி பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டக்கிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இவ்வேளையில் இந்த போட்டியின் முதல் நாளில் நேற்று இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை குவித்து இருந்தது. அப்பொழுது 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Shreyas Iyer

ஒரு கட்டத்தில் இந்திய அணி 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது புஜாராவுடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஐந்தாவது விக்கெட் 149 ரன்களை சேர்த்திருந்தது. இப்படி ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த 86 ரன்கள் மூலம் இந்த வருடத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஷ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் சராசரியுடன் 38 இன்னிங்ஸ்களில் விளையாடி 13 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் என 1493 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்ததாக சூரியகுமார் யாதவ் 1424 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs BAN : அதிர்ஷ்டத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ், இந்தியாவை தூக்குவாரா அஷ்வின்? 2வது நாள் உணவு இடைவெளி ஸ்கோர் இதோ

தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரோடு இந்த ஆண்டு முழுமை அடைவதால் இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த இந்திய கிரிக்கெட் வீரராக ஷ்ரேயாஸ் ஐயரே திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement