சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு நாங்கள் செய்த இந்த தவறே காரணம் – வில்லியம்சன் வேதனை

kane williams
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நாற்பத்தி நான்காவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

csk vs srh
CSK vs SRH

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஆரம்பத்திலிருந்தே ரன் குவிக்க பெருமளவில் சிரமப்பட்டு வந்தது. அந்த அணியின் துவக்க வீரரான சகா மட்டும் 44 ரன்களை குவிக்க டாப் ஆர்டரில் மத்த எந்த பேட்ஸ்மேனும் பெரிதளவு கைகொடுக்கவில்லை. அதேபோன்று பின்வரிசையில் அபிஷேக் வர்மா மற்றும் அப்துல் சமத் ஆகியோர் ஓரளவு பங்களிப்பை அளித்தாலும் அவர்களால் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி ஆனது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணியானது துவக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அதிலும் குறிப்பாக துவக்க வீரர்களான கெய்க்வாட் 45 ரன்களையும் டூ பிளசிஸ் 41 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதன் பின்னர் மோயீன் அலி மற்றும் ரெய்னா ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

Ruturaj
Ruturaj Gaikwad

பின்னர் ராய்டு மற்றும் தோனி ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 19.4 ஓவரில் சென்னை அணி ஆனது 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களைக் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக தகுதியடைந்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றிக்குத் தேவையான ரன்களை நாங்கள் குவிக்கவில்லை. அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் கடைசி 5 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸ்சில் மேலும் 10 முதல் 15 ரன்கள் வரை அதிகமாக குவிக்கவே சில மாற்றங்களை செய்து இருந்தோம்.

williamson 1
Kane Williamson

ஆனால் பவர் பிளேவின் முடிவில் கிடைத்த 40 ரன்கள் போதுமானதாக இருந்தாலும் அதன் பின்னர் நாங்கள் சரிவர விளையாடவில்லை. துவக்கம் எங்களுக்கு சிறப்பாக அமைந்தாலும் மிடில் ஆர்டரில் நாங்கள் போதுமான ரன்களை குவிக்கவில்லை. இருப்பினும் பின் வரிசையில் வந்த வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதேபோன்று சிஎஸ்கே அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர் செயல்பட்டனர்.

இதையும் படிக்கலாமே: அடுத்தமுறை ஷார்ஜா பிட்ச்க்கு நிறைய கிளவுஸ் எடுத்துனு வரணும் – டூ பிளசிஸ் பகிர்ந்த சுவாரசிய தகவல்

நாங்கள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அதிலிருந்து சற்று முன்னேற இனிவரும் போட்டிகளில் முயற்சிப்போம் என வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement