அடுத்தமுறை ஷார்ஜா பிட்ச்க்கு நிறைய கிளவுஸ் எடுத்துனு வரணும் – டூ பிளசிஸ் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Faf du plessis
Advertisement

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற நாற்பத்தி நான்காவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

csk
CSK IPL 2021

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. அதன்பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூ பிளிசிஸ் ஆகியோரது சிறப்பான துவக்கம் காரணமாக போட்டியின் ஆரம்ப முதலே சி.எஸ். கே அணி அதிரடி காட்டியது.

38 பந்துகளைச் சந்தித்த கெய்க்வாட் இரண்டு சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் என 45 ரன்களைக் குவித்தார். அதேபோன்று 36 பந்துகளைச் சந்தித்த டூ பிளிசிஸ் 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரி என 41 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரது சிறப்பான துவக்கம் காரணமாக சென்னை அணி எளிதாக வெற்றியை நோக்கி பயணித்தது.

- Advertisement -
Duplesis
Faf Du plessis CSK

இருப்பினும் மிடில் ஆர்டரில் மொயின் அலி 17 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பின்னர் அம்பத்தி ராயுடு மற்றும் தோனி ஆகியோர் ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் இந்த போட்டியில் 41 ரன்களை விளாசிய துவக்க வீரர் டூ பிளிசிஸ் தான் ஆட்டமிழந்த விதம் குறித்து போட்டிக்குப் பின்னர் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

இந்த மைதானத்தில் அதிக அளவு புழுக்கம் இருந்தது. அதன் காரணமாக மோசமான ஷாட்டினாலே நான் ஆட்டம் இழந்தேன். புழுக்கம் அதிகமாக இருந்ததால் கைகள் அடிக்கடி வேர்த்தன. அதனால் கை கிளவுஸ்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தேன். ஆனால் அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவேஇனிமேல் அடுத்த முறை இங்கு விளையாடும் போது நிறைய கிளவுஸ் களை எடுத்து வர வேண்டும் என்று டூ பிளிசிஸ் சுவாரசியமான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிக்கலாமே: நாங்க நெனச்ச அளவுக்கு அவர் சூப்பரா விளையாடல. ராஜஸ்தான் சீனியர் வீரரை விளாசிய சங்கக்கரா

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சிஎஸ்கே அணியில் எத்தனை வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் பின்வரிசையில் பேட்டிங் செய்ய பலமான வீரர்கள் இருப்பதாகவும் மொயீன் அலி அணியில் இணைந்த முக்கியமான வீரர் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement