இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 2008ஆம் ஆண்டு 19 வயத்துக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்காக உலகக்கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அது முதல் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இன்று உலகின் தலைசிறந்த வீரராக விளையாடி வருகிறார். அதோடு மட்டுமின்றி 2008ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
அது முதல் தற்போது 13 ஆண்டுகளாகவே பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரின் துவக்க ஆண்டுகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மலும் அந்த ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு விளையாடி இருந்தார்.
இந்நிலையில் தான் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராத் கோலியை பார்த்தபோது என்ன தோன்றியது என்பது குறித்து அக்மல் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் விராட் கோலியை பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அந்த இளம் வயதிலேயே அற்புதமான ஆட்டத்தை விராட்கோலி வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி அப்போ ஒரு சாதாரண வீரராக வெளுத்து வாங்கிய கோலி என்று பல இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகவும், ரோல்மாடலாகவும் திகழ்ந்து வருகிறார்.
நான் பார்த்த கோலிக்கும் தற்போதுள்ள கோலிக்கும் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் இருக்கின்றன. கோலியை குறைத்துப் பேசுவது தவறு அவர் ஒரு சிறப்பான வீரர், நல்ல கேப்டன். ஐசிசி தொடர்களை அவர் ஜெயிக்கவில்லை என்றால் என்ன ? மற்றபடி அவர் ஒரு சிறந்த கேப்டன் என அக்மல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.