இப்படி இருந்தா எப்படி ஜெயிக்க முடியும்? பாகிஸ்தான் வீரர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டிய – கம்ரான் அக்மல்

Akmal
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது வெற்றி பெற்ற வங்கதேச அணியானது இரண்டாவதாக நடைபெற்ற டெஸ்டிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை நிகழ்த்தியிருந்தது.

தோல்விக்கு காரணம் இதுதான் :

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் வேளையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதோடு பாகிஸ்தான அணியை சேர்ந்த முன்னாள் வீரர்களே அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இந்த தோல்வி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் தற்போது பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவருக்கு கூறுகையில் :

சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் சொந்த மண்ணில் நடக்கும் எந்த தொடரையும் வெல்ல முடியாது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே நமது அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக கிடையாது. பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது சில சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர். ஆனால் அவரும் அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கவில்லை.

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போது நமது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் அங்கு டெஸ்ட் போட்டிகளை வென்றோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. ஏற்கனவே நமது அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் வலிமையாக இருந்து வந்தனர்.

இதையும் படிங்க : 43/4 டூ 168 ரன்ஸ்.. ருதுராஜ் அணியை நங்கூரமிட்டு தூக்கிய தமிழக வீரர் பாபா இந்திரஜித்.. முன்னிலை பெற்ற சி

ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் முன்பை போன்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதில்லை. இந்த ஒரு சில காரணங்களால் தான் தற்போது நமது அணி பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த குறையை நீக்கி மீண்டும் அணியை பலப்படுத்தவில்லை என்றால் இனியும் தோல்விகளை சந்திக்க நேரிடும் என கம்ரான் அக்மல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement