43/4 டூ 168 ரன்ஸ்.. ருதுராஜ் அணியை நங்கூரமிட்டு தூக்கிய தமிழக வீரர் பாபா இந்திரஜித்.. முன்னிலை பெற்ற சி

- Advertisement -

என்னை மன்னித்துவிடு ஈஷா

இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அதில் அனந்தபூர் நகரில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா சி மற்றும் டி அணிகள் மோதிய போட்டி நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி மிகவும் தடுமாற்றமாக விளையாடி 168 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9, தேவ்தூத் படிக்கல் 0, கேஎஸ் பரத் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 34-5 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய அக்சர் படேல் 6 பவுண்டரி 6 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

காப்பாற்றி இந்திரஜித்:

இந்தியா சி அணிக்கு அதிகபட்சமாக விஜயகுமார் வைசக் 3, ஹிமான்சு சௌஹான் 2, அன்சுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் 7, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஹர்ஷித் ராணா வேகத்தில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அடுத்ததாக வந்த ஆரியான் ஜூயல் 12, ரஜத் படிடார் 13 ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார்கள். அதனால் 43-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியா சி அணியும் 150 ரன்கள் தாண்டுமா என்ற சந்தேகம் இருந்தது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ வீரர் பாபா இந்திரஜித் நங்கூரமாக விளையாடினார். அவருக்கு அபிஷேக் போரேல் கை கொடுத்தார்.

இந்தியா சி முன்னிலை:

அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் அபிஷேக் போரல் 34 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த மாணவ் சுதர் 1, ரித்திக் ஷாக்கீன் 5, விஜயகுமார் 1 ரன்களில் அவுட்டானதால் 108-8 என மீண்டும் இந்தியா சி அணி சரிந்தது. ஆனால் அப்போதும் கைவிடாத பாபா இந்திரஜித் டெயில் எண்டர் அன்சுல் கம்போஜுடன் கைகோர்த்தார்.

இதையும் படிங்க: கிரிக்கெட் கரியருக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா என்ன செய்யப்போகிறார்? அவரது மனைவி பகிர்ந்த பதிவு

அந்த வகையில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு முக்கியமான 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா சி அணியை தூக்கிய பாபா இந்திரஜித் அரை சதமடித்து 9 பவுண்டரியுடன் 72 (149) ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இறுதியில் அன்சுல் கம்போஜ் 2 (28) ரன்கள் எடுத்ததுடன் 168 ரன்கள் குவித்த இந்தியா சி அணி டி அணியை விட 4 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா டி அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisement