இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 72 டெஸ்ட் போட்டிகள், 197 ஒருநாள் போட்டிகள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் ஜடேஜா இதுவரை 240 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த ஜடேஜா :
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் ஒன்றாக ஓய்வை அறிவித்த ஜடேஜா தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.
ஆனால் ரவீந்திர ஜடேஜாவை கம்பீர் இனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் தான் சேர்ப்பார் என்பதில் உறுதியாக இருப்பதால் அவருக்கு அண்மையில் ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் இடம் மறுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது 35 வயதை எட்டியுள்ள ஜடேஜா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் கிரிக்கெட்க்கு பிறகு அவர் என்ன செய்யப் போகிறார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :
ரவீந்திர ஜடேஜா அதிகாரப்பூர்வமாக பாஜக கட்சியில் இணைந்ததை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே குஜராத் ஜாம்நகர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிவாபா அந்த கட்சியில் பிரபலமான ஒரு நபராக இருந்து வரும் வேளையில் தற்போது ஜடேஜாவும் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : நானும் ஜடேஜாவும் இல்லனா என்ன? அடுத்து 3 தரமான ஸ்பின்னர்கள் தயாரா இருக்காங்க – அஷ்வின் கருத்து
இதன் காரணமாக நிச்சயம் கிரிக்கெட்க்கு பிறகு ஜடேஜா பாஜக சார்பாக அரசியலில் களமிறங்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக-வில் சேர்ந்த ஜடேஜாவின் மனைவி 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.