இந்திய அணி செய்யும் இந்த விஷயத்தை பாத்தா ஆச்சரியமா இருக்கு. செம ஸ்ட்ராங் தான் – கம்ரான் அக்மல் பாராட்டு

Kamran
- Advertisement -

இந்திய அணியானது தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அதோடு பல்வேறு இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருப்பதால் அடுத்தடுத்து பல வீரர்கள் இந்திய அணியில் சுழற்சி முறையில் விளையாடுகின்றனர். இப்படி முதன்மை அணியில் இடம் பெற கடுமையான போட்டி நிலவு வரும் வேளையில் இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு அணியும் தற்போது தயாராகவே இருக்கிறது. ஏனெனில் அண்மையில் முதன்மை வீரர்களைக் கொண்ட அணி ஒரு தொடரில் பங்கேற்று விளையாடும்போது இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாம் தர அணியும் தனியாக ஒரு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

INDvsRSA

- Advertisement -

ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருந்த வேளையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்திருப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட மற்றொரு அணியானது இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இப்படி இரண்டு அணிகள் பிரிந்து விளையாடினாலும் இரண்டு அணிகளிலுமே தரமான வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கினை துரத்திய இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்த இந்திய அணி குறித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் குறித்தும் பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் கிரிக்கெட் வாரியம் மிகச் சிறப்பான செயல்பாட்டை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஏனெனில் அவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு அணிகளுடன் விளையாடும் அளவிற்கு சர்வதேச அளவில் தரமான வீரர்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

- Advertisement -

தற்போது முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையில் விளையாட சென்றுள்ள வேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அற்புதமாக விளையாடியுள்ளது. என்னதான் இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் தென்னாப்பிரிக்கா அணி அவர்களை எளிதில் வீழ்த்தவில்லை.

இதையும் படிங்க : புவனேஷ்வர் குமாரை விட இவர் நல்ல பவுலர். அவருக்கே சேன்ஸ் கொடுத்திருக்கலாம் – ஹர்பஜன் சிங் கருத்து

இப்படி இரண்டு அணிகளை உருவாக்கும் அளவிற்கு இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை இந்திய நிர்வாகமும் திறமையாக கையாள்கிறது. நிச்சயம் இந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியால் வெற்றிகளை பெற முடியும் அளவிற்கு அவர்கள் பெரிய பலத்துடனே இருக்கின்றனர் என கம்ரான் அக்மல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement