புவனேஷ்வர் குமாரை விட இவர் நல்ல பவுலர். அவருக்கே சேன்ஸ் கொடுத்திருக்கலாம் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இம்மாதம் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்க உள்ள டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் 16 அணிகள் மோதுகின்றன. அதன் காரணமாக இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ICC T20 World Cup

- Advertisement -

அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா பயணித்துள்ளது. அங்கு சென்று பயிற்சி போட்டியில் விளையாடும் இந்திய அணி அதன் பிறகு டி20 உலக கோப்பை தொடரில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்தான பல்வேறு கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் பகிர்ந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சாகருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று தனது வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Deepak Chahar IND

இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய அணியில் தீபக் சாகரால் மட்டுமே பந்தினை இருபுறங்களிலும் ஸ்விங் செய்ய முடியும். பவர் பிளேவில் அசத்தலாக பந்து வீசும் அவர் இரண்டு மூன்று விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே எடுத்துக்கொடுக்கும் திறனுடையவர். அதோடு அவரது பந்துவீசும் விதம் தனித்துவம் மிக்கது.

- Advertisement -

எனவே பொறுத்தவரை தற்போது புவனேஸ்வர் குமாரை விட தீபக் சாகர் சிறந்த பார்மில் இருக்கிறார். அவருக்கே முதன்மை அணியில் இடம் கொடுத்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கங்குலி, கம்பீர் வரிசையில் சூப்பர் பிளேயரா இருந்தும் யாருமே பாராட்டுவதில்லை – இந்திய வீரர் பற்றி சஞ்சய் பாங்கர் ஆதங்கம்

அவர் கூறியது போலவே தற்போது அற்புதமாக பந்து வீசி வரும் தீபக் சாகர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். நன்கு பேட்டிங் தெரிந்த அவருக்கே வாய்ப்பு அளிக்கலாம் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement